.

Pages

Monday, December 22, 2014

முத்துப்பேட்டையில் ஜனவரி 5-ம் ந்தேதி சாலை மறியல் !

முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய கூட்டம் கட்சிக்கு சொந்தமான தியாகி சிவராமன் கட்டிடத்தில் நடைப்பெற்றது. ஒன்றிய துணைச்செயலாளர் ராமநாதன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி ஊறுப்பினருமான முருகையன், மாவட்ட நிர்வாக குழு ஊறுப்பினர் சந்திரசேகரஆசாத,; விவசாய சங்க ஒன்றிய செயலாளர் யோகநாதன் ஆகியோர் பேசினார்கள். இதில் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றிய மாநாடு வருகிற 26,27 ஆகிய தேதிகளில் ராமஜெயம் மகாலில் நடத்துவது. முத்துப்பேட்டை டி.எஸ்.பி தொடர்ந்து பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவதாலும், எடையூர் போலீஸ் சரகம் அம்மாளுர் கிராமத்தில் தலித் பெண்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்டித்தும், இடைத் தரகர் மூலம் கையூட்டு பெற்றுக்கொண்டு பாதிக்கப்படுபவர்களுக்கு எதிராக செயல்படுவதாலும், முத்துப்பேட்டையில் நடைப்பெறும் ஜாதிய மோதலுக்கு டி.எஸ்.பி தான் காரணமாக இருப்பதாலும் அவர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வரும் 05.01.2015 அன்று முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் சாலைமறியல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் குணசேகரன், நிர்வாகிகள் கோவிந்தராஜ், குமார், மார்ச் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர்.

செய்தி: 'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.