முத்துப்பேட்டை பகுதியில் பல ,டங்களில் வனத்துறை கட்டுப்பாட்டில் ஏராளமான தேக்கு மரங்கள் உள்ளது. சமீப காலமாக பல பகுதிகளில் மர்ம கும்பல்கள் தேக்கு மரங்களை வெட்டி கடத்தி திருடி வருகிறது. பல இடங்களில் வெட்டப்படும். தேக்கு மரங்களை அருகில் உள்ள குளங்களில் மூழ்கடித்து பதுக்கி வைத்து வருவதாகவும், தேவைப்படும் நேரத்தில் அதனை எடுத்து விற்பதும், தங்களது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்துவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் உதயமார்த்தாண்டபுரம் நாச்சிக்குளத்தில் ஆற்று கரை ஓரமிருந்த ஏராளமான தேக்கு மரங்களை அடிக்கடி வெட்டி கடத்தி திருடப்பட்டு வந்தது. அவர்களை பிடிக்க முத்துப்பேட்டை வனத்துறையினர் பல்வேறு முயற்சி எடுக்கப்பட்டு வந்த நிலையில் தேக்கு மரம் கடத்தல் கும்பலை சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்து பல லட்சம் மதிப்புள்ள தேக்கு மரங்களைப் பறிமுதல் செய்தனர். பலருக்கு அபாராத தொகையும் வசூல் செய்யப்பட்டது. இருந்தும் பலப்பகுதிகளில் தொடர்ந்து வெட்டி கடத்தப்பட்டு வருவது முத்துப்பேட்டை வனத்துறையினருக்கு சவால் விடும் செயலாக உள்ளது.
மேலும் தனியார் வீடுகளில் மற்றும் தோப்புகளில் வளர்க்கப்படும் தேக்கு மரங்களை வனத்துறை மற்றும் வருவாய் துறை அனுமதியில்லாமல் வெட்டி விற்பதும், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவதும் சமீபகாலமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சட்ட விரோதமாக வெட்டப்படும் மரங்களா ? அல்லது தனியாருக்கு சொந்தமான மரங்களா ? என்ற குழப்பமும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. காரணம் தேக்கு மரங்கள் துண்டாக வெட்டப்பட்டு மாட்டு வண்டிகள், டிராக்டர், வேன், லாரி போன்ற வாகனங்களில் ஏற்றி அடிக்கடி முத்துப்பேட்டை நகரை வலம் வருவதாகவும், இதனை வனத்துறையினர் கண்டு கொள்வது கிடையாது என்றும் ஏற்கனவே கடந்த நவம்பர் 6-ந் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து வனத்துறை சம்மந்தப்பட்ட பகுதிகளை அதிரடியாக சோதனையிட்டு நடவடிக்கை எடுத்தது இருந்தும் தேக்கு மரம் வெட்டி கடத்தும் கும்பல் பல பகுதிகளில் ,இரவு நேரங்களில் மரங்களை வெட்டி கடத்தும் செயலை அறங்கேற்றி வருகிறது. அதற்கு உதாரணமாக ஆலங்காடு, கோரையாறு, ஆற்றாங்கரை ஓரம் மற்றும் வீரன் வயல் செல்லும் வழியில் உள்ள தேக்கு மரங்களை மர்ம கும்பல் கடந்த சில தினங்களாக இரவில் வெட்டி தங்களது தேவைக்கு ஏற்றதுபோல் அதனை துண்டாக்கி எடுத்து சென்று வருகிறது. தற்பொழுது பயன்படாத மரத்துண்டுகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கிறது. பல நாட்களாக நடந்து வரும் இந்த கடத்தலை வனத்துறையினர் கண்டுக்கொள்ளாதது அப்பகுதி மக்களை கவலை அடைய வைத்துள்ளது.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.