.

Pages

Wednesday, December 31, 2014

ஏர் ஏசியா நிறுவனத்திற்கு அடுத்த அதிர்ச்சி: ரன்வேயை விட்டு தடம்புரண்டு புல்வெளியில் பாய்ந்த விமானம் !

ஏர் ஏசியா விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டுள்ளதாக வெளியான தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 28ம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட QZ8501 ஏர் ஏசிய விமான விபத்தே உலகளவில் இன்னும் ஓயாத ஆலைகளாய் இருக்கும் நிலையில், மற்றொரு விபத்து நிகழ்ந்துள்ளது அந்நிறுவனத்திற்கு பேரதிர்ச்சியாய் உள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மனிலாவிலிருந்து(Manilla) 159 பயணிகளுடன் பானே(Banea) தீவில் உள்ள கலிபோவுக்கு(Kalibo) A320 என்ற விமானம் நேற்று புறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலிபோ விமான நிலையத்தில் குறிப்பிட்ட ஓடுதளத்தில்(runway) விமானத்தை தரையிறக்கும்போது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடியுள்ளது.

இதனால் ஓடுதளத்தை தாண்டி புல்வெளியில் விமானம் பாய்ந்துள்ளது. அப்போது உள்ளே இருந்த பயணிகள் உயிர் பயத்தில் அலறி அழத் தொடங்கியுள்ளனர். ஆனால் விமானத்தின் முன்பகுதி மண்ணில் குத்தி நின்றுவிட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

2 comments:

  1. பட்ட இடத்திலே படும் கேட்ட குடியே கெடும்"
    என்று ஒரு தமிழ் பழமொழி ...இதன் அர்த்தம் அசம்பாவிதம் நடக்ககூடிய ஒரு சாரார் அல்லது அந்த வர்க்கம் நமக்கு இப்படி ஏற்பட்டுவிட்டதே என்ற பதஷ்டத்தில் அதையே நினைத்துகொண்டு செயல்படும் போது மென்மேலும் அந்த தவறுதல்கள் அடுத்து நடைபெறுவதும் இதற்க்கு ஒரு காரணம் ...அனைத்து நடவடிக்கைகளும் அல்லாஹ்வின் கட்டளைப்படியே நடக்கும்.அதில் இதுவும் ஒன்று .

    ReplyDelete
  2. Payana thuwa
    avaseyam otha veandum
    pala aapaththukal anukathu

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.