.

Pages

Sunday, December 28, 2014

'நல்லாசிரியர்' விருது பெற்ற முதுகலை ஆசிரியர் அதிரை சாகுல் ஹமீது !

அதிரையை சேர்ந்தவர் F. சாகுல் ஹமீது. அனைவராலும் 'மீரா' என அன்புடன் அழைக்கப்படுபவர். இவர் சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் அமைந்துள்ள முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். சிறுவயது முதல் மார்க்க பற்றுதலை பேணி நடக்கும் இவர் கல்வி பணியில் எந்நேரமும் மூழ்கி இருப்பவர்.

இந்நிலையில் கேஎஸ்ஆர் குரூப் ஆஃப் இன்ஸ்ட்டியூஷன் சார்பில் தமிழகமெங்கும் பணிபுரியும் சாதனை நிகழ்த்திய தலைசிறந்த ஆசிரியர்களுக்கு 'நல்லாசிரியர்' விருது வழங்குவதற்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 2000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பரிசிலினைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். இறுதியில் விருதுக்காக ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் நமதூரை சேர்ந்த சாகுல் ஹமீது அவர்களும் ஒருவர். அதிக மதிப்பெண்கள்  - அதிக தேர்ச்சி - சிறந்த கல்விப்பணி - மாணவர்கள் நலனில் அதிக அக்கறை உள்ளிட்ட தகுதியின் அடிப்படையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு திருச்சங்கோட்டில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் ( INSA ) டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்களிடமிருந்து பெற்றார். நல்லாசிரியர் விருது பெற்ற சாகுல் ஹமீது அவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர், சக ஆசிரியர்கள் , குடும்பத்தினர், ஊர் பிரமுகர்கள், நண்பர்கள் என பலரும் வாழ்த்தினர்.

5 comments:

  1. An anpu napar
    shahul hameed. Sar
    avarkalukku vaalththukkal.
    arumaiyana pathevu
    adirai newssukku nanre

    ReplyDelete
  2. தாங்களின் முயர்ச்சிக்கும் கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி. மேலும்பல சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்.

    திறமைகள் யாவுமே
    தீர்க்கமாய் நிலைகொள்ளும்
    தூரத்து நிலவொளியாய்
    தொடர்ந்திடும் எந்நாளும்

    ReplyDelete
  3. தாங்களின் முயர்ச்சிக்கும் கடின உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி. மேலும்பல சாதனைகள் படைத்திட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. எங்கள் சகோதரர் 'மீரா' அவர்கள் மென்மேலும் பணியில் சிறக்க, மேலும் பல விருதுகளை பெற்று ஊருக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. நல்லாசிரியர் விருதுபெற்ற மீரா அவர்கள் நான் படிக்கும் போது எனக்கு சீனியர், நன்கு பலக்கமுடையார் இளமை பருவத்திலேயே மார்க்க பற்றுமிக்கவர் இன்று விருது பெற்று ஊருக்கு பெருமை சேற்றுள்ளார். கல்வி பணியில் நம்மவூர் சிலர் மற்ற சமுதாயக் பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார்கள்.

    கல்வி பணியில் உள்ளவர்கள் செல்லுமிடம் சிறப்புதான். மீரா அவர்கள் மேலும் விருதுகள் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.