.

Pages

Saturday, December 27, 2014

கவி கா.மு ஷெரீப் நூற்றாண்டு விழா [ படங்கள் இணைப்பு ]

'சிட்டுக்குருவி சிட்டுக்குருவி செய்தி தெரியுமா, வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா, உலவும் தென்றல் காற்றினிலே, ஏரிக்கரை மேலே போறவளே பெண் மயிலே.. போன்ற, காலத்தால் அழியாத புகழ் பெற்ற பாடல்களை எழுதியவர் கவி.கா.மு.ஷெரீப்.

ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்து, தெற்கெல்லைப் போராட்டம், திருத்தணி மீட்புப் போராட்டத்தில் தளபதியாக விளங்கியவர். திமுக தலைவர் கருணாநிதியின் திரையுலக நுழைவுக்கு காரணமாக இருந்தவர்.

கா.மு.ஷெரீப்பின் நூற்றாண்டையொட்டி, (26-12-2014) வெள்ளி மாலை, சென்னை ராணி சீதை மன்றத்தில் நூற்றாண்டு விழா நடைபெற்றது. கவிக்கோ அப்துல் ரகுமான், கவிப்பேரரசு வைரமுத்து, தமிழச்சி தங்கபாண்டியன், காவ்யா சண்முக சுந்தரம், வீரபாண்டியன், எம்.ஏ.முஸ்தபா, ஆளூர் ஷாநவாஸ் ஆகியோர் உரையாற்றினர்.

விழாவில், கா.மு.ஷெரீப் எழுதிய நூல்கள், நூற்றாண்டு மலர், கா.மு.ஷெரீப் திரை இசை முத்துக்கள் ஆடியோ குறுந்தகடு ஆகியன வெளியிடப்பட்டன. பி.எச்.அப்துல் ஹமீத் தொகுப்புரையில், பழம்பெரும் பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி, முகேஷ், குமரி அபூபக்கர் ஆகியோரின் இசைநிகழ்ச்சியும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை முஸ்தபா தமிழ் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

படங்கள்: ஆளூர் ஷாநவாஸ்

1 comment:

  1. பழையபாடல்கள் என்றைக்கும் சிந்தனை தரக்கூடியதும் அதற்க்கு எப்போதும் மதிப்பும் உள்ளது என்பதை நிரூபிக்கும் வண்ணமாக "பணம் பந்திலே..... குணம் குப்பையிலே " ; அன்னையே போல் ஒரு தெய்வம் இல்லை ... என்று எழுதிய கவி.கா.மு.ஷெரீப் அவர்கள் எழுதியதை சொல்லலாம்.

    ஆனால் இப்போ வர்ற கவிதை எல்லாம்
    உன் காதல் சொல்லத்தேவை இல்லை
    என் காதல் சொல்ல நேரமில்லை ......அடடா என்ன கண்டுபிடிப்பு!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.