.

Pages

Tuesday, December 23, 2014

சாலையை சீரமைத்து கேட்டு பள்ளி மாணவர்கள் நடத்திய நூதன போராட்டம் !

முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள சாலையை சீரமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து மாணவர்கள் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீச்சல் அடித்து நூதனப்போராட்டம் நடைபெற்றது.

முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி கிராமத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் எந்தவித அடிப்படை வசதிகளையும் ஊராட்சி நிர்வாகம் செய்து தரவில்லை என்று கூறி அதிகாரிகள் கவனத்தை ஈர்க்க பல்வேறு நூதணப்போராட்டங்களை நடத்தி உள்ளனர். இந்த நிலையில் கீழநம்மங்குறிச்சி பாமினிஆறு பாலத்திலிருந்து மேலநம்மங்குறிச்சி கிராமம் வரை உள்ள சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சாலை மண் சாலையாக உள்ளதால் மழைக்காலங்களிலும், இரவு நேரங்களிலும் மக்கள் சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது. இந்த நிலையில் அந்த சாலையை தார் சாலையாக அமைத்து தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டாக போராடி வருகின்றனர். இந்த நிலையில் சில மாதங்களாக சம்மந்தப்பட்ட சாலை மிகவும் குண்டும் குளியுமாகவும், மழைக்காலம் என்பதால் சேரும் சகதியுமாக காட்சி அளிப்பதால் உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று சாலை மறியல் போராட்டம,; சாலையில் நாற்றுநடும் போராட்டம், பாடைத்தூக்கும் போராட்டம் என அறிவித்து நடத்தினர். இருந்தும் இதனை பார்வையிட்டு சென்ற அதிகாரிகள் இதுநாள் வரை சாலை பணிக்கான எந்த வித சிறு பணியை கூட துவங்கவில்லை. இதனால் விரக்தி அடைந்த கிராம மக்கள் மிகவும் கவலை அடைந்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று அப்பகுதி இளைஞர்களும், மாணவர்களும் ஒன்று திரண்டு நூதண முறையில் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் நீச்சல் அடித்து போராட்டம் நடத்தினர். அப்பொழுது ஊராட்சி ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், தமிழக அரசுக்கு எதிரான சோசங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த போராட்டத்தால் பெரும் பரபரப்பானது. அப்பகுதியில் போக்கு வரத்து முற்றிலும் தடைப்பட்டது. கடைசி வரை அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இது குறித்து போராட்டம் நடத்திய மாணவர்கள் கூறுகையில்: 
அதிகாரிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காக நூதண முறையில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். இனியும் அதிகாரிகள் அலட்சியம் படுத்தினால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு அறை நிற்வனம் போராட்டம் அடுத்த கட்டமாக நடத்த இருக்கிறோம் என்றனர்.

செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

1 comment:

  1. நூதன போராட்டம் என்று சொல்லி பள்ளிமானவர்களை கேலி செய்வதாக உள்ளது . பஸ் மறியல் பண்ணினால்தான் அரசு அதிகாரிகள் வருவார்கள் என்று தெரியாதா? இராமதாஸ் மருத்துவரிடம் கேளுங்கள் சரியான பதில் கிடைக்கும்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.