.

Pages

Tuesday, December 30, 2014

செக்கடி குளத்தை சுத்தி சுத்தி வரும் மணி தாரா ! [ படங்கள் இணைப்பு ]

அதிரையின் சிஎம்பி வாய்கால் இணைப்பில் உள்ள குளங்களுக்கு மீண்டும் ஆற்று நீர் வந்ததை அடுத்து செக்கடி குளம் தண்ணீரால் முழுவதும் நிரம்பி கடல் போல் காட்சி அளித்து வருகிறது.

இக்குளத்தில் இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேரம் போவது தெரியாமல் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர். அருகில் உள்ள 15 அடி உயரத்திற்கும் மேலான கட்டிடத்தின் மேலிருந்து குளத்தில் டைவ் அடித்தும், நீந்தியும் செல்கின்றனர். இவற்றை இப்பகுதியினர் வியப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஆர்வலர்கள் சிலர் பசுமையை வலியுறுத்தி  மணித்தாராக்கள், வங்குசங்களை குளத்தில் நீந்த விட்டுள்ளனர். இவற்றை மக்தப் பள்ளிக்கு சென்று வரும் இளம் சிறுவர்கள் ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர். அருகே சென்று ரசித்து வருகின்றனர். இந்த பறவைகள் குளத்தில் நீந்தி செல்லும் காட்சி பொதுமக்களின் பார்வையை வெகுவாக ஈர்த்துள்ளது.

3 comments:

  1. please put some barrier in the edge , for concerning the kids security,

    ReplyDelete
  2. செக்கடிக்குளம் தோற்றத்தை மாற்றி அதனை எழில்மிகுந்த வன்னமாகவும் அழகுதோற்றத்திலும் மற்றும் நடைமேடையாக அமைத்தல் என்பது வரவேற்கக்கூடிய விஷயம் தான், இருப்பினும் இப்புகைபடத்தை பார்த்த பின்புதான் எந்தவொரு பாதுகாப்பின்மை என்பதை குறிக்கின்றது.

    ஆபத்தான ஒன்று பள்ளிகளுக்கும் செல்லும் பிள்ளைகளுக்கு முழு பாதுகாப்பு அவசியம். எல்லாருக்கும் தண்ணீரென்றால் ஒரு ஈர்ப்பு இருக்கும், பிள்ளைகளுக்கு சொல்லவே வேண்டாம்.

    ஆகவே குளத்தை சுற்றி பாதுகாப்பு வலையமிடுவது அவசியமான ஒன்று....

    "காற்றுள்ளபோதே துற்றிக்கொள்" என்பது போல, எந்த ஒரு உயிர்சேதமாவதற்க்கு முன்னே தடுக்க வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.