.

Pages

Wednesday, December 24, 2014

அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பா ? புகார் செய்யலாம் !

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து தாசில்தாரிடம் மனு அளிக்கலாம் என கலெக்டர் சுப்பையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு நிலங்களில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றிட மேல்முறையீடு மற்றும் சீராய்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான மனுக்களை மனுதாரர் தொடர்புடைய வட்டாட்சியரிடம் கொடுக்க வேண்டும். அந்த நிலத்தை தொடர்புடைய மண்டல துணை வட்டாட்சியர் அல்லது வட்டாட்சியர் புலத்தணிக்கை செய்து, ஆக்கிரமிப்பு உள்ளதா, இல்லையா என முடிவு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு உள்ளது எனில், ஆக்கிரமிப்பாளருக்கு அறிவிப்பு அனுப்பி, விதிமுறைகளின்படி, ஆக்கிரமிப்பை அகற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மனுதாரரின் மனுவின் மீது எடுத்த நடவடிக்கை குறிறது மனுதாரருக்கு எழுத்துபூர்வமாக அளிக்க வேண்டும். வட்டாட்சியரிடமிருந்து எழுத்துப்பூர்வமான பதில் கிடைக்கவில்லை என்றாலோ, ஆக்ரமிப்பு அகற்றுவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் வழங்கப்பட்ட பதிலின் மீது ஆட்சேபனை இருந்தாலோ, மனுதாரர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் தனது மேல்முறையீடு மனுவினை அளித்திடலாம். இந்த மனுவை வருவாய் கோட்ட அலுவலர், காவல் துணை கண்காணிப்பாளர், நில அளவைத் துணை ஆய்வாளர் ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு குழு விசாரிக்கும்.

மேல்முறையீட்டுக் குழுவானது தேவைப்பட்டால் மனுதாரருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இடத்தை ஆய்வு செய்து, ஆக்ரமிப்பு அகற்றுவது தொடர்பாக உரிய பதில் மனுதாரருக்கு எழுத்துபூர்வமாக தெரிவிக்கும். இதிலும் ஆட்சேபனை இருந்தால் மனுதாரர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான சீராய்வு குழுவிடம் மேல்முறையீடு செய்யலாம். சீராய்வுக் குழு ஆக்ரமிப்பு அகற்றுவது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொண்டு உரிய பதிலை அளிக்கும்.

2 comments:

  1. முதல்மனுவாக பிலால்நகரில்உள்ள நீர் நிலைகளை பிலால் நகர் கிழக்கு பக்கம் உள்ள காலேஜ் காமவுண்டு ஓரம் சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் தண்ணீர்கள் வெளியேற முடியாம் சாலையில் தேங்கி வழிப்போக்கர்களுக்கு மிகவும் இடையூறாக உள்ள நிலை மாறும் இதை சமூக ஆர்வலர்கள் மனு கொடுத்து போர்கால நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிகச்சரியான நினைவூட்டல், சமூக ஆர்வலர்கள் காலம் தாழ்த்திடாமல் உடனடியாக இப்பிரச்சனையை கையிலெடுக்க வேண்டும்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.