சந்தைப்பள்ளியின் பழமையான கட்டிடத்தை இப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. இதற்காக கடந்த 12/05/2012 அன்று மதுக்கூர் ஜாமிஆ மஸ்ஜித் கமிட்டி மூலமாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் பேரூராட்சி தலைவர் N.S.M.பஷீர் அகமது அவர்களின் முயற்சியினால் தமிழக அரசின் தன்னிறைவுத் திட்டத்தின் மூலமாக புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது.
ஜாமிஆ மஸ்ஜித் பரிபாலன கமிட்டி நிர்வாகிகள்,இரு சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர் பெரியோர்கள்,பேரூராட்சி உறுப்பினர்கள் முன்னிலையில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சி கடந்த 01/05/2013 அன்று நடைபெற்றது. சந்தைப்பள்ளிக்கூட கட்டிடப்பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 28/11/2014 அன்று நடைபெற்ற பேரூராட்சி மன்ற கூட்டத்தில் கட்டிடத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்கு பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சந்தைப்பள்ளிக்கூடம் புதிய கட்டிடத்தில் அனைவரின் ஒத்துழைப்பாலும், பேரூராட்சி தலைவர் சகோதரர் N.S.M.பஷீர் அகமது அவர்களின் பெரும் முயற்சியாலும் கட்டி முடிக்கப்பட்டு இன்று 22/12/2014 திங்கள் கிழமை பஜ்ர் தொழுகைகு பின்னர் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இப்பள்ளிக்கூடம் கட்டுமான பணிக்கு உதவி புரிந்த முன்னாள், இன்னாள் ஜமாத் நிர்வாகிகளுக்கும்,பொருளாதார உதவி புரிந்த கொடையாளர்களுக்கும், கல்வியாளர்களுக்கும், பேரூராட்சி உறுப்பினர் பெருமக்களுக்கும், எடுத்துக்கொண்ட பணியினை சிறப்புடன் நிறைவேற்றிய மதுக்கூர் பேரூராட்சி தலைவர் N.S.M. பஷீர் அகமது அவர்களுக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் மதுக்கூர் நகரத்தின் சார்பாக வாழ்த்தையும், பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமுமுக - மதுக்கூர் கிளை
மதுக்கூர் ஒரு நேரத்தில் எப்படியோ இருந்தது, அனா, தற்போது மிகவும் நல்ல நிலையில் வரத் தொடங்கி விட்டது. அந்த ஊரு மக்களில் ஒத்துழைப்பு. வாழ்க.
ReplyDeleteஜமாஅத்தினர் ஒன்றிணைந்து செய்த இந்தக் கல்விப் பணி, பாராட்டத் தக்கது.
ReplyDelete