.

Pages

Saturday, December 27, 2014

அதிரையில் சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணைய வாடிக்கையாளர்கள் தீவிரம் !

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை நேரடியாகப்பெறும் திட்டம் தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்த நேரடி மானியத்தைப் பெறுவதற்காக அடுத்த ஆண்டு 2015-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை தவறவிட்டால், எரிவாயுக்கான நேரடி மானியத்தை பெறமுடியாமல் போய்விட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக விண்ணப்பிப்பதற்கு என்னென்ன நடைமுறைகளை பின்பற்றவேண்டும் என்பது பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதற்காக அதிரை பட்டுக்கோட்டை சாலையில் இயங்கும் பாலு இன்டேன் காஸ் அலுவலகத்திற்கு படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பாலு இன்டேன் காஸ் சார்பில் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் உதவிகளையும், தகவல்களையும் வழங்குவதற்கு பிரத்தியோகமாக கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே ஆதார் எண்ணை எரிவாயு விநியோகஸ்தரிடம் ( பாலு இன்டேன் காஸ் ) பதிவு செய்து இருந்தாலும் வாடிக்கையாளர்கள் அலுவலகத்தை தொலைப்பேசி வாயிலாகவோ அல்லது நேரடியாகவோ தொடர்பு கொண்டு மீண்டும் இவற்றை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். மேலும் வங்கி கணக்கு உள்ள சம்பந்தப்பட்ட மத்திய வங்கிகளுக்கு நேரடியாக சென்று ஆதார் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.