தமிழ்த்தேர் நண்பர்கள் இலக்கியச் சந்திப்பும் குழந்தைகள் தின சிறப்பு நிகழ்ச்சியும் 19.12.2014 வெள்ளிக்கிழமை காலை 11.00 மணி அளவில் துபாய் கராமாவில் உள்ள சிவ ஸ்டார் பவன் உணவகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே, 16.12.2014 அன்று பெஷாவர் ராணுவப் பள்ளியில் நிகழ்ந்த குழந்தைகள் படுகொலைக்கு கண்டனமும், கவிதாஞ்சலியும் நடைபெற்றது. மேலும் நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் மெளன அஞ்சலியும் செலுத்தினர்.
அடுத்து, அமீரகத்தில் தங்களின் கடின
உழைப்பால், சாதனைகள் நிகழ்த்தியிருக்கும் குழந்தைகள் தங்கமீன்கள் திரைப்படத்தில்
நடித்து முதல் படத்திலேயே தேசிய விருதுபெற்ற சிறுமி சாதனா, அமீரக மேடைகளை தன்
குழுவினருடன் இணைந்து நடனங்களாலும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளாலும் வசப்படுத்திய
சகலகலாவல்லி நிவேதிதா, ஷேக் ஹம்தான் விருது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கான
விருது என்று பல்வேறு விருதுகளை சிறு வயதிலேயே பெற்ற சிறுவன் ஹுமைத், பலகுரலில்
பேசி பாராட்டு பெற்று வரும் சிறுவன் அரவிந்த் பாரதி, குட்டி ஹவிஷா சுரேஷ் ஆகியோர்
கலந்து கொண்டு வானலை வளர்தமிழ் மற்றும் தமிழ்த்தேர் சார்பில் பாராட்டப்பெற்று
கெளரவிக்கப்பட்டார்கள்.
செல்வி ஆனிஷாவின் தமிழ்த்தாய் வாழ்த்தோடு
நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை கவிதாயினி நர்கீஸ்
பானு வரவேற்புரை நல்கி
வரவேற்றார்.
நிகழ்வில் வானலை வளர்தமிழ்-தமிழ்த்தேர்
நண்பர்கள் ஹெல்த் கணேசன், தஞ்சாவூரான்
ஃபாரூக், சசிக்குமார், ரஃபீக், கருப்பசாமி, நாகினி, சங்கீதா, பிரியதர்ஷிணி சுரேஷ், ஹுசேன், சந்திரசேகர், முத்துப்பேட்டை ஷர்புதீன், ஜியாவுதீன், காவிரிமைந்தன், நர்கீஸ் பானு, ராம்விக்டர், ஜெயராமன் ஆனந்தி, ஷேக் ஹிதயத்துல்லா ,குறிஞ்சிநாடன், ந.காமராஜ் , சக்திவேல், செல்வி ஆனிஷா, வெற்றிவேல்
செழியன், ராஜ்குமார், அபுபக்கர்-யாஸ்மின் அபுபக்கர் குடும்பத்தினர்
மற்றும் பலர் பங்கேற்றனர்.
கவிஞர் ஜியாவுத்தீன் தொகுப்புரை வழங்கிட,
குழந்தைகள் சிறப்பு நிகழ்ச்சியையொட்டி. கவியரங்கத் தலைமை ஏற்றார் செல்வி ஆனிஷா
அவரின் தாயார் நர்கீஸ் பானு துணையுடன். இலக்கு தலைப்பில் கவியரங்கம் சிறப்புற
நடைபெற்றது. செவியுணவு தரும்விதமாய் கவித்துவநடையோடு முன்னுரையும் கவிஞர்களுக்கான
பின்னுரையும் கவியரங்கத்திற்கு அழகு சேர்த்தது. விழாவில் உரையாற்றிய தமிழ்த்தேர்
ஆசிரியர் காவிரிமைந்தன் அடுத்து வரும் ஆண்டுமுதல் மாதந்தோறும் நிகழ்ச்சிகள்
சிறப்பு நிகழ்ச்சிகளாக பல்வேறு வகைகளில் அனைவரும் விரும்பும்வண்ணம் அமைக்கப்படும்
என்று தெரிவித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த இளைய
சாதனையாளர்களில், சாதனாவுக்கு கவிதாயினி நாகினி அவர்கள் சால்வை அணிவித்தார்,
கவியன்பன் கலாம் நினைவுப் பரிசு வழங்கினார். அடுத்து ஹுமைதுக்கு சசிக்குமார்
சால்வை அணிவிக்க, திரு.ஹுசைன் நினைவுப் பரிசு வழங்கினார். நிவேதிதாவுக்கு திருமதி
யாஸ்மின் அபுபக்கரும், அரவிந்த் பாரதிக்கு திரு.ரஃபீக்கும், குட்டி ஹவிஷாவுக்கு
திருமதி.சங்கீதாவும் நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினர்.
குழந்தைகள் ஒவ்வொருவரும் தங்களின்
சாதனைகளையொட்டி சிற்சில திறமைகளையும், அனுபவங்களையும் மேடையில் பகிர்ந்து அரங்கேற்றி
அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர். அது
தவிர, ஒவ்வொரு பரிசாளரும் தங்களின் ஏற்புரையில் தமிழ்த்தேருக்கும் அமைப்பின்
நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
தமிழ்த்தேர் இதழ்களின் 84வது சிறப்பிதழாக
இலக்கு இதழ் வெளியிடப்பட்டது. முதல் இதழை திரு.குப்புசாமி வெளியிட திரு.தினேஷும், இரண்டாம்
இதழை திரு.காமராஜ் வெளியிட, திரு.லத்தீஃபும், மூன்றாம் இதழை திரு.அபுபக்கர்
வெளியிட, திரு.தஞ்சாவூரான் ஃபாரூக்கும் பெற்றுக் கொண்டனர். இலக்கு இதழின்
அட்டைப்படத்திற்கு வண்ணம்சேரத்து எல்லோரின் எண்ணங்களாய் பிரதிபலித்த லட்சுமி
நாராயணன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தன்னிலையில் பல்வேறு
சூழல்கள் நிலவியபோதும் தமிழ்த்தேரின் இதழ்களை சீரோடும் சிறப்போடும்
வெளிக்கொணரும் பதிப்பாசிரியர் கவிஞர் ஜியாவுதீன் அவர்களுக்கும் அவரின் துணைவியார்
நர்கீஸ் பானு அவர்களுக்கும் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.
அடுத்த மாதத் தலைப்பாக ‘கவிதையும் கற்பனையும்’ வருகிறது. இது தவிர ‘மக்கள் மனதில்
மக்கள் திலகம்’” என்னும் சிறப்பு மலரும்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் பிறந்தநாளையொட்டி அவரின் மனிதநேயப்
பண்புகளுக்காக நல்லொழுக்கம் கற்றுத்தந்த வழிகாட்டியெனும் அடிப்படையில் கவிஞர்
காவிரிமைந்தன் மற்றும் கவிஞர் சசிகுமார் இணைந்து வழங்க, கவிஞர் ஜியாவுத்தீன்
கைவண்ணத்தில் வெளிவரவிருக்கிறது என்கிற செய்தியும் அறிவிக்கப்பட்டது.
குழந்தைகள் சிறப்பு நிகழ்ச்சியாய் நடைபெற்ற
இந்நிகழ்வின் நன்றியுரையை தமிழ்த்தேர் பதிப்பாசிரியர் ஜியாவுத்தீன் வழங்கி நிறைவு
செய்தார்.
வானலை வளர்தமிழ் - தமிழ்த்தேர் நண்பர்கள்
குடும்ப சந்திப்பாக அமைந்த இந்நிகழ்வின் ஏற்பாடுகளை சிவ ஸ்டார் கோவிந்தராஜ், கவிஞர் காவிரிமைந்தன் , கவிஞர் ஜியாவுதீன், குளச்சல் இப்ராஹிம், லட்சுமி நாராயணன் மற்றும் ஊடகவியாளர் முதுவை ஹிதாயத் சிறப்புற செய்திருந்தனர்.
தகவல் மற்றும் புகைப்படம்
முதுவை ஹிதாயத்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.