.

Pages

Sunday, December 28, 2014

160 பேருடன் மாயமான ஏர் ஏசியா விமானம்: உறவினர்கள் வேதனை !

இந்தோனேசியாவின் சுரயபோ நகரத்திலிருந்து சிங்கப்பூரிற்கு 160 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் மாயமாகி உள்ளது. ஏர்ஏசியா விமாசேவைக்கு சொந்தமான ஏ320-200 விமானமொன்று காணமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விமானத்துடனான தொடர்புகள் இன்று காலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், விமானத்தை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுரபாயோவிற்கும், சிங்கப்பூரிற்கும் இடையிலான ஜாவா கடற்பகுதிக்கு மேலாகவே குறிப்பிட்ட விமானம் காணமற்போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விமானம் காணமல்போவதற்கு முன்னர் வழமைக்கு மாறான பாதையில் பயணிப்பதற்கான அனுமதியை கோரியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஹடி முஸ்தப்பா உறுதிப்படுத்தியுள்ளார்.

இரண்டாம் பாகம்:-
மாயமான ஏர்ஏசியா விமானம் பெலிங்டங் தீவு அருகே ஜாவா கடற்பகுதியில் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பாகங்கள் மாயமான விமானத்தின் பாகங்களா என ஆய்வு நடைபெற்று வருகிறது.

மூன்றாம் பாகம்:-
இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து கிடக்கும் கிழக்கு பெலிடங் கடற்பகுதிக்கு விரைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக இன்று அதிகாலை சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் க்யூ. இசட். 8501, ஜகார்தா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பிலிருந்து விடுபட்டது.

விமான கட்டுப்பாட்டு மையத்துடன் விமானத்தின் தொடர்பு விடுபடுவதற்கு முன், தனது வழக்கமான பாதையில் போவதை விட்டு, வேறு பாதையில் போக அனுமதி கோரப்பட்டதாகவும், அப்போது கலிமந்தனுக்கும் ஜாவா தீவுகளுக்கும் இடையே ஜாவா கடலில் மேலே 32000 அடி உயரத்தில் பறந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. இப்பொழுதெல்லாம் மலிவு விலை விமானச்சேவை நிறுவனங்கள் நிதி நெருக்கடியில் தள்ளாடுவது வாடிக்கை... இதற்க்கு முக்கிய காரணம் லாபத்தின் அளவு வெகுவாக குறைந்ததே... நினைத்துப்பார்க்க முடியாத அளவில் குறைந்த கட்டணத்தில் சேவைகளை வழங்கியதால் வந்த பலன் இது என்றுதான் தோன்றுகிறது... பணமில்லாமல் எப்படி விமானத்தை சரியாக பராமரிக்க முடியும்? முன்னர் MH370 விமானம் செயற்கைக் கோளுடன் நிரந்தரமாக தொடர்பு வைத்துக்கொள்ளும் வசதியை பெற போதிய சந்தா செலுத்தாமல் பணத்தை மிச்சப்படுத்தியதால் இன்றுவரை அது எங்கு விழுந்தது என்று கூட தெரியவில்லை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.