.

Pages

Saturday, December 27, 2014

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருகிறது ஒரு ரூபாய் நோட்டு !

சில்லரை தட்டுப்பாட்டை போக்க ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ,500, ரூ.1,000, ரூ.5,000, ரூ.10,000 நோட்டுக்களை அச்சிட உரிமை கொண் டது. ரூ.1, ரூ.2 நோட்டுக்கள் நாணயமாக வெளியிடப்படுவதால் இந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவது நிறுத்தப்பட் டது. இருப்பினும், இவை அரிதாக இன்றும் புழக்கத்தில் உள்ளன. ரூ.5 மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் அச்சிடுவதும் நிறுத்தப் பட்டது. சிறிய மதிப்பிலான ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் 57% உள்ளன. ஆனால், மதிப்பு அளவில் இவை 7% மட்டுமே. இவற்றின் சராசரி வாழ்நாள் ஓராண்டு என்ற அளவிலேயே உள்ளது. இதை கருத்தில் கொள்ளும்போது அச்சிடும் செலவு அதிகமாகிறது.

எனவே இந்த இலக்க மதிப்புகள் நாணயங்களாக மாற்றப்பட்டன. அச்சிடும் செலவை கருத்தில் கொண்டு 1994ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டன. இதுபோல் 1995ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ரூ.2 நோட்டும், 1995 நவம்பர் மாதத்தில் ரூ.5 நோட்டும் அச்சிடுவது நிறுத்தப்பட்டது. தற்போது ஒரு ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு உள்ளதால், சில்லரை தட்டுப்பாட்டை சமாளிக்க ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. முன்பு புழக்கத்தில் இருந்த ஒரு ரூபாய் நோட்டு கருநீல நிறத்தில் இருந்தது. தற்போது புதிதாக அச்சிடப்பட உள்ள ஒரு ரூபாய் நோட்டு இளஞ்சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். ரூ.2 தொடங்கி, அதற்கு மேல் மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களில் பாரதிய ரிசர்வ் பாங்க் என இந்தியிலும், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என ஆங்கிலத்தி லும் அச்சிடப்பட்டிருக்கும். ரிசர்வ் வங்கி கவர்னரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். ஆனால், ஒரு ரூபாய் நோட்டில் முன்புறத்தில் பாரத் சர்க்கார் என இந்தியிலும், அதன்கீழ் கவர்மென்ட் ஆப் இந்தியா என ஆங்கிலத்திலும் அச்சிடப்பட்டிருக்கும்.

இதில் நிதித்துறை செயலாளர் கையெழுத்து இடம்பெற்றிருக்கும். புதிதாக ஒரு ரூபாய் நோட்டுக்களை மீண்டும் அச்சிடுவதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும், சில்லரை தட்டுப்பாட்டை போக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுபோல், எத்தனை ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்படும் என்ற எண்ணிக்கை விவரமும் அளிக்கப்படவில்லை. கடைசி யாக 4.4 கோடி ஒரு ரூபாய் நோட்டுக்கள் அச்சிடப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டிருந்தன. பிறகு ரிசர்வ் வங்கி ஒரு ரூபாய் நாணயம் அச்சிட்டு வெளியிட்டிருந்தாலும், ஒரு ரூபாய் நோட்டுக்கள் இன்னும் செல்லத்தக்கதாகவே உள்ளன. கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரப்படி மார்ச் 2002 இறுதி வரை 3,07 கோடி ஒரு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

2 comments:

  1. ஆயிரம் ரூபாய் நாணயமும் வந்துவிட்டது.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.