முத்துச்சாமிபுரத்தில் ஓட்டு வீட்டில் வசிக்கிறார். அ.தி.மு.க.,வின் நீண்டகால விசுவாசி. கணவர் மூக்காண்டி, கொத்தனார் பணி செய்கிறார். இவர்களுக்கு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகி விட்டது. அன்றாடம் பாத்திரம் தேய்த்தால் தான் வீட்டில் உலை; இல்லையேல் பட்டினி என்ற நிலை. இவரது வார்டு அருந்ததியினருக்கு ஒதுக்கப்பட்டதால், தேர்தலில் நிற்க 500 ரூபாய் தான் டிபாசிட் தொகை. அதையும் கட்சியினர் தான் கட்டினர். தேர்தல் செலவையும் அவர்கள் தான் பார்த்துக் கொண்டனர். இந்தக் காலத்தில் இப்படி ஒரு மக்கள் பிரதிநிதியா!
அவரே மனம் திறக்கிறார்...:
''இரண்டு வீடுகளில் கடந்த 20 ஆண்டுகளாக சமையல் பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கிறேன். இதற்கு சம்பளம் தலா 600 ரூபாய். காலை 8:30 முதல் பிற்பகல் 12:30 மணி வரை வேலை. பின், எனது வீட்டிற்கு சென்று சமையல் செய்வேன். நகராட்சி கூட்டத்தில் மக்களின் கோரிக்கையை வலியுறுத்துவேன். என்னால் முடிந்த அளவு மக்கள் பணி செய்கிறேன். ஒரு சிலர் என்னை ஏளனமாக பார்த்தாலும் கண்டு கொள்வதில்லை. பிறர் நம்மை வசதி மிக்கவர்களாக பார்க்கவேண்டும் என்பதற்காக, கடன்வாங்கி படாடோபம் காண்பிப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும். உழைத்து பிழைத்தால் மட்டுமே நிம்மதியாக தூங்கலாம்,'' என்றார்.
நன்றி: கீழக்கரை டைம்ஸ்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அபூர்வமானது, அருமையானது, அற்புதமானது, அழகானது, உண்மையானது.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
இவருடைய எழிமை பாராட்டக்கூடியது தான் ஆனால் மக்கள் இவரை தேடிவரனும் என்றால் எந்த வீட்டில் இருப்பாருன்னு யர்ருக்கு தெரியும்?VIP வீட்டில் வேலைபர்ர்க்க இவர் போகலாம் மக்கள் போக முடியுமா? அம்மா பாசத்தின் மீது உள்ளவர் அம்மா உணவகம் நடத்தி மக்களை தயக்கமின்றி சந்தித்தால் அடுத்த MLA கூட ஆகலாம் பிடிக்கலையா மகளிர் அணித்தளைவியாக வந்திடலாம்.
ReplyDeleteஅம்மா மீனம்மா கொஞ்சம் யோசனைப்பன்னி பாருங்க.