கடலின் உள்பகுதியில் வலைகளை வீசி மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் போது, கடலில் பலமாக வீசிய காற்றாலும், அலைகளின் சீற்றத்தால் படகு நிலை தடுமாறியது. படகின் ஆட்டத்துக்கு ஏற்ப நிற்க முடியாமல் தள்ளாடிய மீனவர் காளிதாஸ் கடலுக்குள் தவறி விழுந்தார். சற்றும் தாமதிக்காமல் உடனிருந்த மீனவர்கள் கடலுக்குள் பாய்ந்து அவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது மீனவர் காளிதாஸ் பரிதாபமாக இறந்து விடுகிறார்.
இதுகுறித்து அதிரை கடலோர பாதுகாப்பு காவல் நிலையத்தில் இறந்தவரின் மகன் காளிக்குமரன் புகார் கொடுத்ததன் பேரில் இன்ஸ்பெக்டர் ஆனந்த், உதவி ஆய்வாளர் முத்துக்குமார் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒருநாள் போவான் ஒருநாள் வருவான் ஒவ்வொருநாளும் துயரம் ...முடிந்தால் முடியும் தொடர்ந்தாள் தொடரும் ...இதுதான் எங்கள் வாழ்க்கை ...
ReplyDeleteமறைந்த சகோதரர் ..காளிதாஸ் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாவங்கள் ...