.

Pages

Sunday, December 28, 2014

அமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் [ AAF ] மூன்றாம் ஆண்டு துவக்கம் மற்றும் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்ச்சி !

அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் மூன்றாமாண்டு துவக்க விழா மற்றும் புதிய  நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் வல்லேகோ சிட்டி  இஸ்லாமிக் சென்டரில் கடந்த 25 ந்தேதி வியாழக்கிழமை மதியம் லுஹர் தொழுகைக்கு பிறகு சகோ மீயன்னா சலீம் அவர்களின் புதல்வர் மாஸ்டர் ஜாபிர் கிராத் ஓத  நிகழ்ச்சி இனிதே துவங்கியது.

நார்தர்ன் கலிபோர்னியாவில் வசிக்கும் அணைத்து அதிரை மக்களும் தங்கள் குடும்பத்துடன்  கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவருக்கும் கூட்டமைப்பின் சார்பாக மதிய உணவு பரிமாறப்பட்டது. இதன் பிறகு புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தலைவராக சகோதரர் ஷேக் அலி அவர்களும்,
துணை தலைவராக மீண்டும் சகோதரர் ஷிப்லி முஹம்மத் அவர்களும், செயலாளராக சகோதரர் மீயன்னா சலீம் அவர்களும்,
துணை செயலளாராக சகோதரர் ஷேக் அப்துல் காதர் அவர்களும் பொருளாளராக சகோதரர் முஹம்மத் அவர்களும் பொறுப்பேற்று கொண்டனர்.

பிறகு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன அதிராம்பட்டினம்  பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ள அல் அமீன் பள்ளிக்கு மேற்கூரை அமைத்த வகையில் ஏற்பட்ட செலவினங்களுக்காக அதிராம்பட்டினம் ஹிமாயதுல் சங்கத்தின் வேண்டுகோள் கடிதம் உறுப்பினர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டு பள்ளிக்கு நிதியதவி அளிப்பதற்கான தீர்மானமும், கலிபோர்னியாவில் வசிக்கும் அதிரை மக்களின் வியாபார நோக்கத்திற்காக இதுவரை மூவருக்கு கடனுதவி அளித்திருப்பதையும் மேலும் உறுப்பினர் சந்தா தொகையில் இருந்து மேலும் யாரேனும் கடனுதவி தேவைப்பட்டு மனு செய்தால், உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் நிர்வாகிகள் முடிவு செய்து கடனுதவி அளிப்பதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

தீர்மானத்தில் மேலும் அதிராம்பட்டிணத்தின் முக்கிய நீர் ஆதாரத்தை பாதிக்கும் ஒலிம்பிக் வாட்டர் சப்ளை கம்பெனியினர் நாள் ஒன்றுக்கு பத்து லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுப்பதாக வந்த தகவலை அடுத்து இது தொடர்பாக கூட்டத்தில் பேசப்பட்டது. இதில் AAF உறுப்பினர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில் அதிரையில் செயல்படும் அனைத்து சங்கங்களுக்கும் கடிதம் எழுதுவது என்றும், தேவைப்பட்டால் தமிழ்நாடு அரசுக்கும், தஞ்சை மாவட்ட ஆட்சியர், தஞ்சை மாவட்ட எஸ்.பி., தமிழக முதல்வரின் சிஎம் செல்லுக்கு கோரிக்கை வைப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்ரிப் தொழுகைக்கு பிறகு விழா இனிதே நிறைவுற்றது.

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    அதிரை அமெரிக்கன் கூட்டமைப்பின் அதிரை கிளை எங்கு செயல் ‎படுகின்றது? விபரம் தேவை..‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  2. நலம், தீர்மானங்கள் வரவேற்க்கப்படுகிறது...

    தண்ணீர் பற்றாக்குறையை போக்க துரீத நடவடிக்கையை மேற்க்கொள்ளுமாறு வேண்டுகிறேன்...அதற்கு நமதூர் சங்கங்கள் ஒத்துழைக்கும் என்று கருதுகிறேன் இன்ஷா அல்லாஹ்.

    நமதூர் பொதுநல காரியத்திற்க்கு பொருளாதார ரீதியில் அனுக வாய்ப்பிள்ளை என கேள்வியுற்றேன், அது சரியான/முறையான தகவலில்லை என்பதை பஸ் ஸ்டாண்ட் அல் அமீன் பள்ளிற்க்கு கொடுக்கப்படும் உதவியில் மூலம் உனர்ந்தேன்.

    வாழ்த்துக்கள், புதிய நிர்வாகிகளுக்கும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.