.

Pages

Sunday, December 21, 2014

அதிரை பேருந்து நிலைய 24 கடைகளுக்கு வெளிப்படையான டெண்டர் விட கோரிக்கை !

அதிரை பேரூராட்சியின் பொது நிதி மற்றும் தஞ்சையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்எஸ் பழனிமாணிக்கம் அவர்களின் 'தொகுதி மேம்பாடு நிதி' ஆகியவற்றிலிருந்து அதிரை பேருந்து நிலைய பகுதியில் வர்த்தக கட்டிடங்கள் மற்றும் மேற்கூரை கட்டி முடிக்கப்பட்டது. இதில் மொத்தம் 24 வர்த்தக கடைகள் ஏலத்திற்கு தயாராக இருக்கிறது. இந்த கடைகளிலிருந்து வாடகையாக கிடைக்கிற வருமானத்தை அதிரை பேரூராட்சி பொதுநல பணிக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில வருடங்களாக மும்முரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து இதற்கான டெண்டர் விடும் பணியை விரைவில் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

முதற்கட்டமாக பேருந்து நிலைய மைய பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள டேக்ஸி வாகனங்களை அப்புறப்படுத்த பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் அதிரைக்கு வருகை தந்த வருவாய் ஆய்வாளர் வாகன ஓட்டுனர்களிடம் நேரடி விசாரணையை மேற்கொண்டார். தொடர்ந்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிகிறது. மேலும்  டேக்ஸி வாகனங்களை நிறுத்துவதற்கு மாற்று இடம் கை காட்டப்படும் என தெரிகிறது. இந்த பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீர்ந்துவிட்டால் இதன்பிறகு கடைகள் ஏலம் விடப்படும் பணிகள் துவங்கும் என தெரிகிறது.

முன்னதாக பேரூராட்சியின் சார்பில் கடைகள் கட்டும் பணி துவங்கியதிலிருந்து கடைகள் அனைத்தும் கட்டி முடிக்கும் வரை ஏராளமான வர்த்தகர்கள் குறிப்பாக பேக்கரி, உணவகம், டீ கடை, பழக்கடை, பலசரக்கு கடை, அடகு கடை ( வட்டிக்கடை ), மதுபானக்கடை, சர்பத் கடை, ஜவுளிக்கடை உள்ளிட்ட பல்வேறு தொழில் புரியும் உள்ளூர் மற்றும் வெளியூர் வாழ் வர்த்தகர்கள் கடைகள் கேட்டு பேரூராட்சி நிர்வாகத்தை அணுகியதாக தெரிகிறது.

அதிரை பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விடும் நாள், இடம் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரங்ககளை எளிமையான முறையில் பலரும் அறிந்துடும் வகையில் பகிரங்க அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும், கடைகளை ஏலத்தில் எடுக்க எவ்வித அரசியல் குறுக்கீடும் இல்லாதவாறு உரிய முறையில் வெளிப்படையான டெண்டர் விடவும், உள்ளூரை சேர்ந்த படித்த பட்டாதாரி இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும், புதிதாக தொழில் தொடங்கும் நபர்களுக்கு கடைகளை வழங்கவும், ஏற்கனவே மற்றொரு இடத்தில் தொழில் நடத்தி வருபவர், மேல் வாடகைக்கு விடும் நபர்கள் ஆகியோரை டெண்டரின் போது புறக்கணிக்கவும், ஒரு நபருக்கு ஒரு கடை என்பதை தீர்மானிக்கவும், மக்கள் அதிகமாகக் கூடும் பகுதியாகிய இங்கு வட்டிக்கடை, மதுக்கடை ஆகியவற்றிற்கு கடைகள் வழங்க வேண்டாம் என பொதுமக்களும், ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து நிலையப்பகுதியில் வாடகை டேக்ஸிகள் நிறுத்தப்பட்டுள்ள காட்சி

2 comments:

  1. பகிரங்க ஏலம் மட்டும்மே பயனாலிக் உதவும் டெண்டர் முறை வகைகள் கையூட்டலுக்கு வழி வகுத்துவிடும் உஷார்!

    ReplyDelete
  2. அரசியல் வாதிகளிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு அதாவது ஆளுங்கட்சி ஏதாவது திட்டம் கொண்டுவந்தால் எதிர்க்கட்சி எதிர்ப்பதும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி துவக்கிவைத்த திட்டத்தை முடக்குவது நாம் கண்டவை. அதிரை நகரில் கழிப்பிட கட்டிடம் கட்டி அது எந்தளவுக்கு இப்போ இருக்குன்னு எல்லோருக்கும் தெரியும் அதுபோல இல்லாமல் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் கட்டிங் பார்ப்பதோடு கட்டிடம் திறக்கப் படும்,

    குடிமகனுக்கு இடம் கொடுக்காதீங்க.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.