முத்துப்பேட்டையில் கடந்த இரண்டு தினங்களாக அறிவிக்கப்படாத தொடர் மின் தடையால் பொதுமக்களும், வர்த்தகர்களும் பெரிதும் பாதிப்பு அடைந்தனர். நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் மாலை வரை முத்துப்பேட்டையில் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டு இருந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்தும,; வியாபார நிறுவனங்கள் இயங்காத நிலைக்கு தள்ளப்பட்டது. மின்சார வாரியத்தைத் தொடர்பு கொண்டு பலரும் கேட்ட போது அதிகாரிகள் முறையான பதில்கள் தெரிவிக்காததால் இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிர்ப்தி அடைந்தனர். இந்த நிலையில் நேற்று காலை முதல் மதியம் வரை முத்துப்பேட்டை நகரம் முழுவதும் மின்சாரம் தடை ஏற்பட்டதால் நேற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆதார அட்டைக்காக புகைப்படங்கள் எடுக்கும் பணி இந்த மின்தடையால் பாதிக்கப்பட்டது. இதனால் ஆதார அட்டை எடுக்க முடியாமல் பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனால் ஆதார அட்டை எடுக்கும் பகுதி மக்கள் கூட்டம் இல்லாமால் வெறிச்சோடி காணப்பட்டது.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.