.

Pages

Monday, December 22, 2014

பழுதடைந்த அதிரை பேருந்து நிலைய சாலையை சீரமைக்க மீண்டும் கோரிக்கை !

அதிரையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அதிரை பேருந்து நிலைய சாலை குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. ஆங்காங்கே தண்ணீரும் தேங்கி காணப்படுகிறது. இது குறித்து கடந்த முறை பல்வேறு தரப்பினர் நெடுஞ்சாலை துறையினரின் கவனத்துக்கு எடுத்துச்சென்றனர். இதையடுத்து குண்டு குழியுமாக காட்சியளித்த பகுதியில் கிராவல் ஜல்லி கொட்டப்பட்டது. அடுத்தடுத்து பெய்த தொடர் மழையால் மீண்டும் சாலை குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் சிறு சிறு வாகன விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் வர்த்தகர்களும், இந்த சாலை வழியே செல்லும் பொதுமக்களும், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் மிகவும் அவதியுற்று வருகின்றனர். சம்பந்தபட்ட நெடுஞ்சாலை துறையினர் பழுதடைந்த பேருந்து நிலைய சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள்:
கே கே யூசுப்

1 comment:

  1. //இதையடுத்து குண்டு குழியுமாக காட்சியளித்த பகுதியில் கிராவல் ஜல்லி கொட்டப்பட்டது. அடுத்தடுத்து பெய்த தொடர் மழையால் மீண்டும் சாலை குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது//

    இந்த நிலை ஏன் தெரியுமா? ஒப்பந்தக்காரர் அல்லது பேரூராட்சி, முறையாகச் செயல்படவில்லை என்பதையே காட்டுகின்றது.

    பழுதடைந்த சாலையைச் சீர் படுத்தத் தொடங்குமுன், பழைய ரோட்டின் மீது இடப்பட்ட ஜல்லி, தார் ஆகியவற்றை முதலில் பெயர்த்தெடுக்க வேண்டும். பின்னர் சமநிலைக்கு வந்த ரோட்டில் புதிய ஜல்லி, தார் முதலானவற்றைப் பரப்பி, ரோட்டைச் சமப்படுத்த வேண்டும்.

    இதுதான் Perfect road making system. "உலகத்தரம், உலகத்தரம்" என்று வாய் கிழியச் சத்தமிடுவதால், பயன் ஒன்றுமில்லை. இப்போதுள்ள முறையில் சீராக்கும் பணி நடந்தால், ஆறு மாதத்திற்குள் குண்டும் குழியுமான அவல நிலைதான் உண்டாகும். அதிகார வர்க்கம் கவனிக்காதா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.