மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட 21 வது மாநாடு சனியன்று (டிசம்பர் 20) பட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் துவங்கியது.
பிரதிநிதிகள் மாநாடு வடசேரி ரோடு அய்யா திருமண மண்டபத்தில் அமைந்துள்ள தோழர் என்.வரதராஜன் நினைவரங்கில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு கொடியேற்றி மாநாட்டினை தொடங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை. பாண்டியன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநாட்டு வரவேற்பு குழுத்தலைவர் ஏ.கோவிந்தசாமி வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி தலைமை உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் கோ.நீலமேகம் வேலை அறிக்கை வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான
ஏ.லாசர் மாநாட்டு துவக்கவுரையாற்றினார்.
முன்னதாக பட்டுக்கோட்டை ஒன்றியச்செயலாளர் எம்.செல்வம் தலைமையில் கொண்டு வரப்பட்ட தியாகிகள் வாட்டாகுடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம், ஜாம்பவானோடை சிவராமன் நினைவுக்கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மாலதியிடமிருந்து மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் எம்.எல்.ஏ பெற்றுக்கொண்டார். ஒரத்தநாட்டிலிருந்து ஒன்றியச்செயலாளர் என்.சுரேஷ்குமார் தலைமையில் கொண்டு வரப்பட்ட கடந்த மாவட்ட மாநாட்டு கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணனிடமிருந்து மாநில செயற்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் பெற்றுக்கொண்டார். திருப்பனந்தாளில் இருந்து கொண்டு வரப்பட்ட தோழர் ஆர்.நடராஜன் நினைவுச்சுடரை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.எஸ்.பாலசுப்பிரமணியனிடமிருந்து மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் பெற்றுக்கொண்டார். முன்னதாக வடசேரி ரோடு
முக்கத்தில் இருந்து மாநாடு நடைபெறும் மண்டபத்திற்கு மாநாட்டு பிரதிநிதிகள் ஊர்வலமாக வந்தனர்.
மாநாட்டில் , " காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிதாக இரண்டு அணைகள் கட்ட தீர்மானித்துள்ளது. இதனால் காவிரி டெல்டா பாசனப்பகுதிகள் பாதிக்கப்படும். எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களை சுடுகாடாக்கும் மீத்தேன் எரிவாயு திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தை சீர்குலைக்கும் மத்திய அரசின் முயற்சியை இம்மாவட்ட மாநாடு கண்டிக்கிறது. பட்டுக்கோட்டை- தஞ்சை - அரியலூர் அகல ரயில்பாதை திட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடித்திட வேண்டும். மேலும் தஞ்சாவூரில் இருந்து இயக்கப்பட்டு பின்னர் நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும். பகல் நேரத்தில் தஞ்சையிலிருந்து சென்னைக்கு புதிய ரயில் இயக்கவேண்டும். ஆண்ட , ஆளுகின்ற அரசுகளின் தவறான கொள்கைகளால் பாதிக்கப்பட்ட தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தை சீரமைக்க வேண்டும். திருப்பெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இயங்கும் பாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையை மூடுவதாக அறிவித்துள்ள நிர்வாகத்தின் முயற்சியை கண்டித்தும்" தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டிசம்பர் 21 ஞாயிறு அன்று பிரதிநிதிகள் விவாதத்திற்கு பிறகு புதிய மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுகின்றனர். வரவேற்பு குழு செயலாளர் எம்.செல்வம் நன்றி கூறுகிறார்.
பின்னர் ஞாயிறு மாலை 4 மணிக்கு அதிராம்பட்டினம் சாலையில் அமைந்துள்ள தியாகவேங்கைகள் வாட்டாகுடி இரணியன், ஆம்பலாபட்டு ஆறுமுகம், ஜாம்பவானோடை சிவராமன் நினைவு சின்னத்தில் இருந்து பேரணி புறப்படுகிறது. மாலை 5 மணிக்கு தலைமை தபால் நிலையம் அருகில் தோழர் ஆர்.உமாநாத் நினைவிடத்தில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் தலைவர்கள் உரை நிகழ்த்த உள்ளனர். மாவட்ட மாநாட்டினையொட்டி பட்டுக்கோட்டை நகரம் கொடிகள், தோரணங்கள், வரவேற்பு பதாகைகள் அமைக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
செய்தி மற்றும் படங்கள்:
எஸ்.ஜகுபர்அலி பேராவூரணி.
மற்றும் ஏ.கே.சுந்தர் தஞ்சாவூர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.