முத்துப்பேட்டையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ காவேரியின் குறுக்கே அணை கட்டும் செயலைக் கண்டித்து விழிப்புணர்வு பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். அப்பொழுது பழைய பேருந்து நிலையத்தில் வைகோ பேசுகையில்:
நரேந்திர மோடி அரசில் அங்கம் வகிக்கும் முக்கிய மந்திரி அனந்தகுமார் அவர் வீட்டில் மேகதாது அணைதொடர்பாக கூட்டம் நடந்துள்ளது. கர்நாடக எம்.பி.க்கள் ஒன்றாக அமர்ந்து பேசி உள்ளனர். அதில் சதானந்தா கௌடாவும் பங்கேற்று உள்ளார். தமிழக அரசு மேகதாது அணைக்கட்டுவதை தடுக்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளது. மத்திய அரசின் சார்பாக வாதாட சதானந்தா கௌடதான் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். அவரே அந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார். மூன்று மந்திரிகள் கலந்துகொண்ட இரண்டு நாள் கூட்டத்தில் கர்நாடகா எம்.பி.க்களும் உட்கார்ந்து பேசி உள்ளனர். இந்த விபரம் நரேந்திர மோடிக்கு தெரியாதா ? ஒரு மந்திரி என்ன டிரஸ் போடுகிறார் என்பதைக் கூட தெரிந்துக்கொள்ளும் அதிகாரம் உள்ள மோடிக்கு கர்நாடகாவில் உள்ள கூட்டம் பற்றி தெரிந்தும் தெரியாதது போல் நாடகம் ஆடுகிறார். ஆனால் அவருக்கு தெரிந்துதான் இந்த கூட்டமே நடந்து இருக்கிறது. இந்த நாட்டிற்கு சுந்திரம் கடைத்த நாளிலிருந்து பதவி வகித்த பிரதம மந்திரிகளில் இப்படிப்பட்ட நயவஞ்சகம் கொண்ட பிரதம மந்திரியை நான் பார்த்ததே இல்லை. நான் அடுத்த கட்ட போராட்டமாக மத்திய அரசு அலுவலகங்களுக்கு பூட்டு போட போகிறேன். தமிழகத்தை பாலை வனமாக்கிவிட்டு மீத்தேன் எடுக்க மத்திய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மண்ணில் பிறந்த நான் இந்த மண்ணை பாதுகாக்க உயிர் உள்ள வரை போராடுவேன். இவ்வாறு பேசினார்.
இதுபோல் முத்துப்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட எடையூர் கடைத்தெரு மற்றும் உதயநாச்சிக்குளம் கடைத்தெரு பகுதிகளிலும் பேசினார். இதில் மாநில துணைப்பொது செயலாளர் துரை.பாலகிருஷ்ணன், அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் நடராஜன், ஒன்றிய செயலாளர் துரை.சிவபிரகாசம், நகர செயலாளர் சீனி.ராஜேந்திரன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
மக்களுக்கு எதிராக செயல்படும் மத்திய அரசை தட்டிக்கேட்க தைரியமான தலைவர்களில் இவரும், மம்தாவும் எனலாம். மேசைதட்டிகள் எல்லாம் அம்மா துதிபாடுவதில் மூச்சாக இருக்குதொலிய உயிர்பிரச்சனையான தண்ணீர் பற்றி கவலை இல்லை.
ReplyDeleteஎந்த பிரச்னை கையில் எடுத்து ஆட்சிக்கு வந்தாங்களோ அதே பிரச்சனையால் ஆட்சி இழப்பார்கள் வரும் தேர்தலில் இது எதிரொலிக்கும். ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்று தான் சொல்லவேண்டும்.