.

Pages

Wednesday, December 24, 2014

அதிரையில் ஒரே பிரசவத்தில் ஆறு குட்டிகளை ஈன்ற வெள்ளாடு ! [ படங்கள் இணைப்பு ]

அதிரை அடுத்துள்ள கீழபழஞ்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். விவசாயியான இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் சினையாக இருந்த வெள்ளாடு ஒன்று ஒரே பிரசவத்தில் ஆறு குட்டிகளை அடுத்தடுத்து ஈன்றது. அதில் மூன்று ஆடுகள் பெண் ஆடுகளாகும். மற்ற மூன்றும் கிடா ஆகும். ஆறு குட்டிகளும் ஆரோக்கியமாக உள்ளன. இத்தகவல் அக்கம்பக்கத்தில் பரவியது. அப்பகுதியினர் வியப்புடன் பார்த்துச் சென்றனர். வழக்கமாக வெள்ளாடு இரண்டு முதல் நான்கு குட்டிகள் தான் போடும். ஆனால் ஆறு குட்டிகள் போட்டது பொதுமக்கள் அதிசயமாக கருதுகின்றனர்.

இதுகுறித்து விவசாயி பழனிவேல் கூறுகையில்...
'இந்த ஆடு முதல் பிரசவத்தில் இரண்டு குட்டிகளும், அடுத்த ஆறு மாதத்தில் இரண்டாவது பிரசவத்தில் ஒரு குட்டியும் ஈன்றது. தற்போது மூன்றாவது பிரசவத்தில் ஆறு குட்டிகள் ஈன்றுள்ளது' என்றார்.

3 comments:

  1. அதிகமாக விரும்பி உண்ணும் பொருள்களில் மறைமுகமான அல்லாஹ்வின் அருள் (பரக்கத) உள்ளது,அதன்வெளிப்பாடு தான் இது அல்ஹம்துரில்லாஹ்!

    ஸஹீஹுல் புகாரி 19. 'ஒரு காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அன்று முஸ்லிமின் செல்வங்களில் ஆடுதான் சிறந்தது. குழப்பங்களிலிருந்து மார்க்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள அந்த ஆட்டைக் கூட்டிக் கொண்டு அவன் மலைகளின் உச்சியிலும் மழை பெய்யும் இடங்களிலும் சென்று வாழ்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஸயீத் அல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
    Volume:1,Book:2.

    ReplyDelete
  2. இது எங்களது கிராமத்து செய்தி ..மிக மகிழ்ச்சி..மூர்த்தி/சவுதி அரேபியா

    ReplyDelete
  3. பார்பதற்கு அவ்வளவு சந்தோசமான செய்தி, எந்தவித மருத்துவ உதவி இன்றி இத்தனை குட்டிகள்? இறைவன் கொடுத்த அருள்,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.