இந்த ஆற்று நீரை செக்கடி குளத்திலிருந்து செட்டியா குளத்திற்கு நேற்று இரவு முதல் திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் இன்று காலை ஆற்று நீர் அருகில் உள்ள நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பளியில் புகுந்தது. இதனால் வகுப்பறையை சுற்றி காணப்படும் பகுதியில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் வாய்கால் தெரு - கடைதெரு சாலைகளிலும், அருகில் உள்ள குடியிருப்பு பகுதியிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இன்று காலை பள்ளிக்கூடத்திற்கு வருகை தந்த மாணவ மாணவிகள் தண்ணீர் சூழ்ந்துள்ளதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இப்பகுதி வழியே செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
பேரூர் நிர்வாகம் போர்கால நடவடிக்கையாக பள்ளிக்கூடத்திலும், சாலையிலும், குடியிருப்பு பகுதியிலும் சூழ்ந்து காணப்படும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியின் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடிகால்கள் சரிவர பராமரிக்கப் படவில்லை என்பதற்கு இதுவே சாட்சியாகும். பேருரார்ச்சி செயலற்று போய்விட்டது மாணவர்களின் நலன் கருதி தன்னார்வ தொண்டர்கள் சரி செய்ய முன்வரவேண்டும். காலம் தாழ்த்தினால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புண்டு.
ReplyDeleteதனியார் பள்ளிகளில் இந்நிலை காணமுடியாது இப்பள்ளி ஆசிரியர்களின் முன்நடவடிக்கை தேவை.