.

Pages

Wednesday, December 24, 2014

வகுப்பு தோழர்களை தேடும் வாய்க்கால் தெரு பள்ளிக்கூட 1978 ம் ஆண்டு மாணவர்!

அதிரை நடுத்தெரு ( வாய்க்கால் தெரு ) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 1978 ம் ஆண்டு தொடக்க பள்ளியாக இருந்த போது மூன்றாம் வகுப்பில் கல்வி பயின்ற அதிரையை சேர்ந்த மாணவர்கள் ஆண்டு இறுதியில் வகுப்பு ஆசிரியை சுமதி அவர்களோடு ஒன்றிணைந்து படம் எடுத்துக்கொண்டனர். இந்த கருப்பு - வெள்ளை படத்தில் இடம்பெற்றுள்ள முன்னாள் மாணவர் அபுல் ஹசன் ( மப்ரூக் டேக்சி )  நமக்கு அனுப்பி அதிரை நியூஸில் பதிய கேட்டுக்கொண்டார். தன்னோடு படித்த தோழர்கள் குறித்த தகவலை அறிய ஆவலாக இருப்பதாக கூறினார்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சிறுவர்கள் தற்போது 42 - 45 வயது மதிக்கதக்க பெரியவர்களாக பல்வேறு நாடுகளில் பணிபுரிபவர்களாகவும், கல்வியாளர்களாகவும், விவசாயிகளாகவும், தொழில் அதிபர்களாகவும், சமூக ஆர்வலர்களாகவும் இருப்பார்கள் என நம்புவோம்.

இந்த படத்தில் நீங்கள் இடம்பெற்றிருந்தால் கருத்துரை பகுதியில் தெரியப்படுத்தவும். மேலும் அதிரை நியூஸ் வாசகர்களாகிய நீங்கள் நமதூர் அல்லது வெளியூரில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளி - நடுநிலைப்பள்ளி - மேல்நிலைப்பள்ளி - மெட்ரிக் பள்ளி - கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றபோது எடுத்த புகைப்படங்களை எங்கள் மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பித்தந்தால் தளத்தில் உடனடியாக பதியப்படும்.   

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.