.

Pages

Wednesday, December 24, 2014

சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இலவச மருத்துவப் பரிசோதனை முகாம் மற்றும் பட்டிமன்றம் நிகழ்ச்சி !

உடல் ஆரோக்கியம் பேணுதல் தொடர்பாக அதிரை ஷிஃபா மருத்துவமனை நிர்வாகம் சார்பில் எதிர்வரும் [ 28-12-2014 ] அன்று காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நமதூர் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் மாலையில் 'உடல் நலம் பேணுதல் இளமையிலா ? அல்லது முதுமையிலா ?' என்ற தலைப்பில் மருத்துவ விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு பேச இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து 'உடல் நலம் பேணுதலும், உணவு பழக்க முறைகளும்' என்ற தலைப்பில் கீழக்கரை தாஸிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சுமையா தாவூத் அவர்கள் சிறப்புரையாற்ற இருக்கின்றார். இதனை தொடர்ந்து திரு.இரா முரளி அவர்கள் உடற்பயிற்சி மற்றும் உடல் நலம் தொடர்பான சந்தேகங்களுக்கு பதிலளிக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.

அழைப்பின் மகிழ்வில்...

2 comments:

  1. Athu. Appade erunthalum
    kalyana. Veetdel. Solle kare verunthai
    neruththuna sare.
    3 maatham orumurai eraththa
    thanam pannuveer

    ReplyDelete
  2. நம் மக்கள் அதிகம் தொலைக்கட்சில் தான் நேரத்தை செலவழித்து வருவதை பார்க்கலாம், உபயோகமான நிகழ்ச்சியில் கலந்துக் கொள்வதுடன் நல்ல பலன்களை பெறலாம், காலத்திற்கு ஏற்ப அருமையான ஏற்பாடு , பயன்படுத்திக்கொள்வது மிக மிக நல்லது.

    நிகழ்ச்சி ஏற்பட்டார்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.