அண்மையில் நிகழ்ச்சியை ஆளுநர் தஞ்சையில் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மனோரா, கல்லணை, அணைக்கரை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
புதன்கிழமை மாலை மல்லிபட்டினத்தை அடுத்த மனோராவில் சலங்கை நாதம் 2014 கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியர் என்.சுப்பையன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடற்படை துணை கமாண்டர் ஆர்.டி.திரிவேதி, பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அரங்கநாதன், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் பாஸ்கரன், பேராவூரணி வட்டாட்சியர் மாணிக்கவள்ளி, சேதுபாவாசத்திரம் ஒன்றியப்பெருந்தலைவர் குழ. சுந்தர்ராஜன், பேராவூரணி அதிமுக ஒன்றியச் செயலாளர் உ. துரைமாணிக்கம், ஒன்றிய துணைப்பெருந்தலைவர் இளங்கோ, ஒன்றியக் கவுன்சிலர்கள் எஸ்.அப்துல் வஹாப், பூமாலை ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர் மருதமுத்து, நாடியம் மதிவாணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அசாம் குழுவினரின் லவட்னா நடனம், கர்நாடக குழுவினரின் நகரி, ஆந்திரா துசாடி உள்ளிட்ட பல்வேறு மாநில குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட ஆட்சியர் பொதுமக்களோடு அமர்ந்து கலைநிகழ்ச்சிகளை ரசித்து பார்த்தார். சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் கோவி.ராஜேந்திரன் நன்றி கூறினார். சுற்றுலா அலுவலர் ராஜசேகரன்விழா ஏற்பாடுகளை செய்திருந்தார். வரும் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை வரை மாலையில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
செய்தி மற்றும் படம்:
எஸ். ஜகுபர் அலி, பேராவூரணி.
மனோராவில் சலங்கை நாதம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட VIP மற்றநாட்களில் அவ்விடம் எப்படி உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். சுற்றலா தளம் என்று சொல்லும் அளவுக்கு இப்போ இல்லை. காலகாலமாக இந்த ஒரு இடம் தான் பொழுது போக்கு, சுற்றலா இடம் என்று அறிவித்து யாரும் வருவதில்லை, காண என்ன இருக்குன்னு நமக்கு தெரியாதா? ஆட்சியாளர் இதில் கவனம் செலுத்தி தரத்தை உயர்த்த வேண்டும்.
ReplyDelete