2015 புத்தாண்டை வரவேற்க உலகமே கோலாகலமாக தாயாராகிக் கொண்டு இருக்கும் நிலையில், புதுமைக்கும் பிரம்மாண்டத்திற்கும் பெயர் போன துபாய் புதிய உலக சாதனை முயற்சியை மேற்கொண்டது. இந்நிகழ்வு பல்வேறு உலக சாதனைகளை தாங்கி நிற்கும் உலகில் உயரமான துபாய் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் நடைபெற உள்ளது.
மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் புர்ஜ் கலிபா கட்டிடம் அமைந்துள்ள டவுன் டவுனின் புத்தாண்டு கொண்டாட்ட ஏற்பாடுகள் ஏற்கனவே களை கட்டதொடங்கி இருக்கும் நிலையில் உலகத்தின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவை வெளிப்புறமாக முழுவதும் அலங்கரிக்கப்பட்டு சுமார் 32,467 சதுரமீட்டர்கள் பரப்பளவில்
எல்.இ.டி விளக்குகளின் மூலமாக திரை போன்று உருவாக்கப்பட்டு இந்த சாதனை முயற்சி மேற்கொள்ளபட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இந்தோனேசியாவின் தாமான் அங்கேரேக்மாலில் நடந்த இது போன்றமுயற்சியே கின்னஸ் சாதனையாக இருந்தது தற்போதைய இந்த முயற்சி முந்தைய கின்னஸ் சாதனையைவிட 3.75 மடங்கு பரப்பளவில் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரம்மாண்டமான இந்த எல்.இ.டி பல்புகளின்அனிவகுப்பு சுமார் 1,00,000 பிராக்கட்டுகளைக் கொண்ட70,000 எல்.இ.டி பல்புகளைக்கொண்டது, இவை அனைத்தும் 55,000 மீட்டர் வயர்களைகொண்டு இணைக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு இரவில் எல்.இ.டி பல்புகளால் முழுவதும் அலங்கரிக்கபட்ட புர்ஜ்கலீஃபா டவரில் துபாயின் பாரம்பரியம், வளர்ச்சி, சாதனை என அனைத்தும் மிகப்பெரிய மல்டி மீடியா திரை மூலம் பிரம்மாண்டமாக ஜொலிக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் புர்ஜ் கலீஃபா டவர் வாணவேடிக்கைகள், பிரபலமான துபாய் நீரூற்றின் உலக இசைகேற்ற நடன என பல்வேறு நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறவுள்ளன.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.