.

Pages

Sunday, December 28, 2014

'எழுத்தாளர்' இப்ராஹீம் அன்சாரி அவர்களின் இல்லத் திருமணத்தில் இணையதள பிரபலங்கள் பங்கேற்பு !

அதிரையின் பிரபல இணையதள எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி. அதிரையரின் படைப்புகளை தாங்கி வரும் பிரபல வலைதளமாகிய 'அதிரை நிருபரில் பொருளாதார, சமூகம், அரசியல், வரலாற்று ஆய்வுகள் உள்ளிட்ட விழிப்புணர்வு ஆக்கங்கள் பலவற்றை தொடர்ந்து எழுதிவருகிறார். மேலும் உள்ளூர் செய்திகளை வழங்கி வரும் 'அதிரை நியூஸ்' இணையதளத்தின் முக்கிய ஆலோசகர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார். வாசகர்களின் மிகுந்த வரவேற்பை பெற்ற ‘மனுநீதி மனித குலத்துக்கு நீதியா ? என்ற நூலை சொந்தமாக வெளியிட்டுள்ளார். மேலும் இரண்டு நூல்களை வெளியிடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளார்.

இந்நிலையில் இவரது மகள் வழி பேத்திக்கு இன்று காலை தோப்புதுறை அல்மதரஸத்துல் ஹமீதிய்யா வளாகத்தில் திருமணம் நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், இரு வீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் எழுத்தாளர் இப்ராஹீம் அன்சாரி அவர்களின் 50 ஆண்டுகால நெருங்கிய நண்பரும், நமதூர் காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வருமாகிய பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் அவர்கள் சிறப்பு விருந்தினராக குடும்பத்தோடு கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். நேரம் கருதி எதிரே காணப்பட்ட நியாமான கூட்டத்தில் சிறிது நேரமே பேசினாலும் சொற்பொழிவு அனைவரையும் கவர்ந்தது.

முன்னதாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக “தமிழ் அறிஞர்” என்று இணையத்தோடு தொடர்புடைய நண்பர்களால் பாரட்டப்படுகிற அதிரையின் 'பன்னூல் ஆசிரியர்' அதிரை அஹ்மது அவர்கள், 'நாவலர்' நூர் முஹம்மது, 'சமூக ஆர்வலர்' லெ.மு.செ. அபூபக்கர், அபுல் ஹசன் ( மப்ரூக் டேக்ஸி உரிமையாளர்), நான் ( சேக்கனா நிஜாம் ) ஆகியோர் கொட்டும் மழையையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அதிரையில் பிரத்தியோகமாக ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் தோப்புதுறைக்கு பயணமானோம்.

அதிரையிலிருந்து சுமார் 75 கிலோ மீட்டருக்கும் குறையாமல் தொலைவை கொண்டுள்ள தோப்புதுறை எனக்கு முதல் பயணம் என்றாலும் மற்றவர்கள் ஓரிரு முறை சென்று வந்துள்ளதாக என்னிடம் கூறியது மகிழ்ச்சியை வரவழைத்தது. 1-1/2 மணி நேர வாகனப் பயணம் எவ்வித அலுப்பும் - சலிப்பும் ஏற்படவில்லை. காரணம் குளு குளுன்னு காணப்பட்ட கிளைமேட் மற்றும் 'நாவலர்' நூர் முஹம்மது அவர்கள், அரசியல், மார்க்கம், விஞ்ஞானத்தில் இஸ்லாமியரின் பங்கு உள்ளிட்ட பயனுள்ள பல விஷயங்களை பேசியது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் 'மப்ரூக்' அபுல் ஹசன் தனது பங்குக்கு மார்க்க சொற்பொழிவை போட்டு எங்களை செவியுற வைத்தது ஒருபுறமிருந்தாலும் எனது அருகில் இருந்த நண்பர் லெ.மு.செ. அபூபக்கர் தனது ஆண்ட்ராய்டு மொபைலில் சேமித்து வைத்திருந்த இஸ்லாம் குறித்த அறிய தகவல்களை மொபைல் திரையில் ஓடவிட்டு காண்பித்தது என்னை நெகிழ வைத்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிரையின் முன்னோடி வலைத்தளத்தில் 'பன்னூல் ஆசிரியர்' அதிரை அஹ்மது எழுதிய 'நல்ல தமிழ் எழுதுவோம்' என்ற நெடுந்தொடரை 'மியான்மர்' நாட்டில் இயங்கும் தமிழ் அமைப்பு ஒன்று விரும்பி கேட்டதை எங்களிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அதிரையரின் படைப்பு ஒன்று கடல் கடந்து பேசப்பட்டது 'பன்னூல் ஆசிரியர்' அதிரை அஹ்மது அவர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாகவே இவற்றை நாங்கள் கருதினோம்.

முன்னதாக காரில் நாங்கள் ஏறியவுடன்  'பன்னூல் ஆசிரியர் ' அதிரை அஹமது அவர்கள் தனது கைவண்ணத்தில் புதிதாக எழுதிய 'தொழுகையாளிகளே' என்ற நூலை எங்களுக்கு அன்பளிப்பு செய்தார்.

திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் பம்பரம் போல் சுழன்று கடந்த சில நாட்களாக பரபரப்புடன் தனது பேத்தியின் திருமண பணியை முன்னின்று செய்து வந்த இப்ராஹீம் அன்சாரி அவர்கள் இன்முகத்தோடு எங்களை வரவேற்று உபசரித்து மகிழ்ந்தார். திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கும்பகோணத்திலிருந்து வருகை தந்த இப்ராஹீம் அன்சாரி அவர்களின் உடன் பிறந்த சகோதரர் முஹம்மது இக்பால் அவர்கள் எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

திருமணத்தில் கலந்துகொள்ள குடும்பத்தோடு வந்திருந்த காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி எங்கள் கூட உடனிருந்து இறுதியில் இன்முகத்தோடு வழியனுப்பி வைத்தார்.

சேக்கனா நிஜாம்

7 comments:

  1. தாங்களின் மின் அஞ்சல் அழைப்பிதல் எனக்குக் கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி மணமக்கள் சகலமும் பெற்று நலமுடன் வாழ எனது நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அலுவலக ஆணையின் வேண்டுகோளுகிணங்க சில வேலையின் நிமித்தம் பங்கேற்க முடியவில்லை. மணமக்கள் நலமுடன் பல்லாண்டு வாழ்க.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    மின்னஞ்சல் அழைப்பிதழ் வந்ததது, திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ‎மனம் இருந்தும் கால நிலை காரணமாக உடல் ஒத்துழைக்காதலால், அந்த ‎நிகழ்ச்சியை இந்த இணைய தளத்தில் கண்டு சந்தோஷப்பட்டேன்.‎

    மன மக்கள் சகல சந்தோஷங்களையும் பெற்று, குறைவில்லா உடல் ‎சுகங்களை பெற்று, எல்லையில்லா ஐசுவர்யங்களையும் அடைந்து ‎எந்நாளும் இன்பத்தோடு இருக்க வல்ல நாயனின் கிருபையும் பரகத்தும் ‎அவர்களூடே இருந்து பல்லாண்டு வாழ வேண்டும். ஆமீன்.‎

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  4. மணமக்கள் நலமுடன் பல்லாண்டு வாழ்க

    பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ   பைனகுமா ஃபீ கைர்.

    ReplyDelete
  5. செய்திகள் எப்போதும் திருக்குறள் போல, இரத்தின சுருக்கமாக 2 வரிகள் தான் இருக்கும், சாலமன் பாப்பையா போல இன்று விரிவாக சேக்கனா நிஜாம் அவர்கள் எழுதி இருக்கிறார்கள், செய்திகள் படிக்கும் போது நானும் கலந்துக்கொண்டது போல் உணர்ந்தேன், அருமை -சூப்பர்

    மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

    பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்.

    ReplyDelete
  6. நேரில் வந்தும் நினைவில் நிறுத்தியும் இங்கு வாழ்த்துரைத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    தம்பி நிஜாம் அவர்களின் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

    ReplyDelete
  7. மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

    பாரக்கல்லாஹு லக வபாரக அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.