.

Pages

Saturday, December 27, 2014

அதிரையில் நடைபெற்ற பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு நிர்வாகிகளுக்கான அதிமுக கட்சி அமைப்பு தேர்தல் !

அதிமுக நிர்வாகிகள் தேர்தல் குறித்த அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டார். இதையடுத்து கடந்த  டிசம்பர் 11ம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி வரை, 14 கட்டங்களாக அதிமுக கட்சியின் அனைத்து நிலைகளுக்குமான தேர்தல்கள் நடக்க இருக்கிறது.

உள்கட்சி நிர்வாகிகள் தேர்தலுக்காக கட்சித் தலைமை தேர்தல் பொறுப்பாளர், மேற்பார்வையாளர், ஆணையர்களையும் அறிவித்தது. இந்நிலையில் அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 21 வார்டு நிர்வாகிகளுக்கான தேர்தல் அதிரை லாவண்யா திருமண மஹாலில் இன்று காலை நடத்தப்பட்டது.

மாநில அமைச்சரும், அதிமுக கட்சியின் தஞ்சை மாவட்ட செயலாளருமான திரு. வைத்திலிங்கம் வழிகாட்டுதல் படி, தேர்தல் நடத்தும் ஆணையர்களாக சேலம் புறநகர் மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் பி. சின்னப்பன், சேலம் புறநகர் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஐ. கணேசன், ஆத்தூர் நகர்மன்ற தலைவர் பி. உமா ராணி, சேலம் புறநகர் எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் சி.சாமியன்ணன் ஆகியோர் செயல்பட்டனர்.

இதில் அதிமுக கட்சியின் நகர உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்குகளை செலுத்தினர். கட்சி தலைமையிலிருந்து வெற்றி பெற்ற 21 வார்டு நிர்வாகிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என தெரிகிறது.

3 comments:

  1. மக்கள் அம்மாவை தேர்ந்தெடுத்தே ...அம்மா முதல்வராக ஆகமுடியலே இதுலே என்ன இந்த கட்சி மற்றவர்களை தேர்ந்தெடுக்கிறது ???
    தலைக்கு மேலே வெள்ளம் போச்சு இனிமே ஜான் போனா என்ன முலம் போனா என்ன ???

    ReplyDelete
  2. மாநில அரசின் திட்டங்கள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் அப்படியே செயல்படுத்தப்படாமல் உள்ளன...4 ஆண்டுகளில் முக்கிய திட்டங்கள் எதுவம் முடிந்து செயல்பாட்டிற்கு வந்ததாக தெரியவில்லை.


    முக்கிய பொறுப்புகளில் அவர்கள் தான் இருக்கிறார்கள் மாற்றினாலும் மாற்றாவிட்டாலும் இனி ஆட்சிக்கு வரப்போறதில்லை. அடுத்த தீர்ப்பு எப்படின்னு யாருக்கும் தெரியாது அதானால தொண்டர்களை உசாற்படுத்துவதார்க்கு இந்த தேர்தலா?

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    கட்சிக்காக அதிகம் உழைத்தவர்களில் கமால் காக்காவும் ஒருவர். ‎இவருடைய இருப்பிடம் காட்டுக்குளம் அருகில் இருக்கின்றது, தற்போது ‎மிகவும் நோய்வாய்பட்டு வாதம் தாக்கி பேச்சு மூச்சு இல்லாமல் ஒரே ‎படுக்கையாக இருக்கின்றார். அவரின் குடும்பத்தார்கள் படுசிரமத்தில் ‎இருக்கின்றனர். ‎

    கட்சி சார்பாக அவருக்கு உதவிகள் ஏதாவது கிடைக்குமா? ‎

    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. (காசுக்கடை கோஸ் முஹம்மது பேரன்)‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.