.

Pages

Sunday, December 28, 2014

செக்கடி மேடு மருத்துவ விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி அதிரை நியூஸில் நேரடி ஒளிப்பரப்பு !

செக்கடி மேடு பகுதியில் இன்று மாலை நடைபெறும் மருத்துவ விழிப்புணர்வு கலந்தாய்வு நிகழ்ச்சி உங்கள் அதிரை நியூஸில் நேரடியாக ஒளிப்பரப்பு செய்யப்படும்.

மேலும் நிகழ்ச்சியின் நேரடி ஒலிப்பரப்பை உங்கள் ரேடியோ தாஃவா ( http://www.radiodawah.org/ ) ல் கேட்டு பயன்பெறலாம்.

2 comments:

  1. நாம் நமதூரை பற்றி நிறைய குறைகள் சொல்கிறோம் ஆனால் இப்படி நடத்தப்படும் முகாம்களுக்கு வரவேற்பளித்து, பங்கேற்று, நம் ஷிபா மருத்துவமனை வளர்ச்சிபெற ஓரளவுக்காவது ஆதரவளித்தால்தான், அவர்களும் ஊக்கமாக முன்னேற்றத்திற்கு ஏற்பாடு செய்வார்கள். இதை தவிர்த்து விட்டு, வரும் டாக்டர்களையெல்லாம் ஏதாவது குறை கூறி வெளியேற்றுவதில்தான் மும்முரமாக இருக்கிறோம்.

    கடந்த காலங்களில் சில குறைபாடுகள் இருந்ததை மறுக்கவில்லை, அதற்காக அதையே பேசி நம் மக்கள் சீரவழிதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது, ஒரு முமீன் அப்படி இருக்கவும் கூடாது.

    நமதூரிலிருந்து ஒரு பெரும் தொகை வைத்திய செலவுக்காக பட்டுக்கோட்டைக்கும், தஞ்சாவூருக்கும், திருச்சிக்கும் போய் கொண்டிருக்கிறது. இப்படி மக்கள் வெளியேறுவதால் பல இன்னல்கள் நம் மக்களுக்கு - குறிப்பாக பெண்களுக்கு- ஏற்படுகிறது. மஹரம் இல்லாதவர்களுடன் பயணிப்பது, மருத்துவமனையில் சகஜமாக அந்நிய ஆடவர்களுடன் பேசுவது, வணக்க வழிபாடுகள் தடைப்படுவது, இதன் தொடற்ச்சியாக பல விபரீதங்களும் நடந்ததாக செய்திகள் வருகின்றன. எத்தனையோ குடும்பங்கள் இன்றுவரை மகபேறுக்கும், சுககுறைவுகளுக்கும் ஷீபாவுக்கு மட்டும் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட விபரீதங்களையும் பெரும் செலவு ஏற்படுவதை தவிற்பதற்கும் நாம்தான் ஷிபா மருத்துவமனையை வளர்ச்சியடைய ஆதரவு அளிக்க வேண்டும். நமதூரை பார்த்து ஆரம்பித்த எத்தனயோ மருத்துவமணைகள் பெரும் வளர்ச்சியடைந்து மக்களுக்கு பெரும் தொண்டினை செய்து கொண்டிருக்கிறது. உதாரணத்திற்கு, கீழக்கரை, காயல்பட்டிணம், அம்மாபட்டினம் போன்ற ஊர்கள்.

    ஒன்றுபட்டு ஊருக்கு நல்லது செய்து நம் பெண்மக்களின் சிரமங்களையும், செலவுகளையும் குறைப்போமாக.

    ReplyDelete
  2. புதிய புதிய சிறப்பு மருத்துவமனைகள் தஞ்சாவூர், திருச்சி,மதுரை வந்தால் அந்த மருத்துவமனை பற்றி, மருத்துவர் பற்றி அறிமுகம் செய்யப்படும் ஊர் நம்மவூர் தான், சங்கம் ,பொது அமைப்பு உள்ளவர்கள் இலவசமுகாம் நடத்தி நம் மக்களை அம்மருத்துவ மனை நோயாளிகளாக மாற்றிவிடுகிறார்கள்.

    ஷிபாவில் சிறப்பு மருத்துவரை அழைப்பதுமூலம் தான் அதனை வளர்ச்சி அடையமுடியும் என்பது என்கருத்து.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.