அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 8 வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து நிறம் மாறி வருகிறது என்றும், மாசு கலந்த குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்துவதால் நோய் பரவ வாய்ப்புள்ளது என கூறி, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியின் வார்டு உறுப்பினர் சேனா மூனா ஹாஜா முகைதீன் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வ. விவேகானந்தன், சுகாதார ஆய்வாளர் வெங்கடேஷன் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இதில் தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்தனர். நீர்தேக்க தொட்டிகள் முறையாக பராமறிக்கப்படுகிறதா ? குடிநீரில் தினமும் குளோரின் கலக்கப்படுகிறதா ? என ஆய்வு செய்தனர்.
மேலும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறதா ? என கண்டறிய குடிநீரின் மாதிரியை பாட்டலில் எடுத்து தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவனையில் செயல்படும் நுண்ணியல் துறைக்கு ஆய்வுக்கு அனுப்ப இருப்பதாக கூறப்படுகிறது. நுண்ணியல் துறை வழங்கும் அறிக்கையை பொறுத்து இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது. மழை காலங்களில் குடிநீரை நன்கு காய்ச்சி பருக வேண்டும் என்றும், பள்ளம் தோண்டி தண்ணீர் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.