.

Pages

Friday, February 6, 2015

ஆவூர் இஸ்திமா மாநாட்டில் பங்கேற்க 11 அரசு பேருந்துகளில் அதிரையர்கள் புறப்பட்டு சென்றனர் !

தஞ்சை மாவட்டம், மன்னார்குடி - கும்பகோணம் சாலையில் அமைந்துள்ள ஆவ்வூரில் இன்று [ 06-02-2015 ] அஸ்ர் தொழுகையிலிருந்து நாளை [ 07-02-2015 ] இஷா தொழுகை வரை இரண்டு நாள் தப்லீக் இஸ்திமா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு சொற்பொழிவு ஆற்று உள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அதிரையிலிருந்து இன்று பிற்பகல் 2.30 மணியளவில் 11 அரசு பேருந்துகளில் அதிரையர்கள் ஆவூர் புறப்பட்டு சென்றனர்.
 
 
 

5 comments:

  1. மாஷாஅல்லாஹ். எந்த ஒறு விளம்பரம் இல்லாமள் லட்சகனக்கிள் மக்களை திறட்டும் ஒறே இயக்கம் தப்லீக் ஜமாத்துதாண்பா

    ReplyDelete
  2. //மாஷாஅல்லாஹ். எந்த ஒறு விளம்பரம் இல்லாமள் லட்சகனக்கிள் மக்களை திறட்டும் ஒறே இயக்கம் தப்லீக் ஜமாத்துதாண்பா//

    நான் தவ்ஹீது அமைப்பை சேர்ந்தவன் அல்ல இருப்பினும் இவர்களிடம் சில கேள்விகள் .

    தொழ கூடியவர்களை மீண்டும் மீண்டும் தொழுகைக்கு அழைப்பது ...மாறாக தொழாதவர்களை தொழுகைக்கு அழைக்கலாம்???

    முஸ்லிம்களுக்கு மட்டும் இஸ்லாத்தை பயான் செய்து நல்வழி படுத்துவது ....மாறாக முஸ்லிம் அல்லாதோரை இஸ்லாத்தில் கொண்டுவர ஏற்பாடுகள் செய்யலாம்???

    மனைவி மக்களை அதிகம் பிரிந்து துறவறம் போல் தன்னை இதிலேயே முழுமையாக இதற்காக அற்பனிப்பது???

    ஒருமுறை ஹனபி இமாம் சுப்ஹு தொழுகையில் குனுத் ஓதவில்லை என்று ஷாபி பிரிவின் ஆட்கள் அத்தஹியாத்தில் இமாம் சலாம் கொடுத்தபிறகு மீண்டும் இரண்டுமுறை சஜிதா செய்தனர் நான் அவர்களை பார்த்து கேட்டேன் உங்களுக்கு தொழுகையில் தவறு ஏதும் இல்லையே ஏன் மேலும் இரண்டு சஜித செய்தீர்கள் என்று அதற்கு அவர்கள் சொன்ன பதில் இமாம் குனூத் ஓதவில்லை என்றனர் .
    அப்படிஎன்றால் நீங்கள் இமாமை பின்பற்றி தொழுததன் அர்த்தம் தான் என்ன என்று வினாவினேன் பதில் இல்லை .

    இவர்களின் பால் மத ஹாப் என்ற பிரிவுகளில் மார்க்க வழிபாடுகளையும் தனித்தனியே வழிபடுதல் ???
    இப்படி எந்த இஸ்லாம் சொன்னது ???

    அல்லது நபிகள் காலத்தில் அல்லது சஹாபாக்கள் காலத்தில் இவ்வாறு ஏதேனும் நடந்ததுண்டா ???

    ReplyDelete
  3. அல்லாஹுத்தால இந்த இஜித்திமாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் நள் அருள் புரிவனாகவும் ,கலந்துகொண்ட மக்கள் அனைவரும் சூழ்நிலை காரணமாக வராத அனைவருக்கும் துவா செய்வீர்களாக
    எந்த இயக்கமாக இருந்தாலும் இஸ்லாம் என்னும்போது அனவரும் ஒன்றுபட்டு ஒருமனதாக வாழ அல்லாஹ் தவ்பீக் செய்வனகவும்
    அங்கு என்ன கற்றுக்கொண்டார்களோ அதன்படிவாழவும் ,அதை வராதவர்களுக்கு எத்திவைக்கவும் அல்லாஹ் அருள்புரிவனகவும்

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்

    நல்லதோர் முயற்சி.
    அல்லாஹ் உங்களுக்கு நற்கூலியை தரட்டும்

    தப்ளிக் அமைபாலர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்,\
    நானும் ஒரு ஷில்ல முடித்தவன் தான், இப்போது தப்ளிகில் இல்லை
    நீங்கள் படிக்கும் அமல்களின் சிறப்பில் சில பொய்யான தகவல்கல் இருக்கிறது. அதை படிப்பதற்கு பதிலாக குர்ஆன் தர்ஜுமா, தப்சீர், அல்லது ஷஹீஹான ஹதீஸ படிக்கலாம் என்று எனூட கருத்தை தெருவிக்கிரன். அணைத்து ஜமாத்திலும் மார்க்கம் அறித்தவர்கள் ஒருவர் இருப்பார் அவரை பயன் படுத்தி நல்லவட்டரை, உண்மையானதை தெரிந்து கொள்ளலாம்.

    வசலாம்

    ReplyDelete
  5. தப்லீக் ஜமாஅத் - தப்லீக் இஜ்திமா இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு, பள்ளி விடுமுறையில் 40, 10, குறைந்தது 3 நாள் தப்லீக் ஜமாஅத் செல்வதால் நன்மைகள் ஒருபக்கம் இருந்தாலும் மனதிற்கும், சிந்தனைக்கும் ஒரு புத்துணர்ச்சி தரும் எனலாம், ஆசிரியர் படி படி என்று சொல்லியே நம் மங்கிய மூளைக்கு தாலீம் வாசிப்பதால் மைண்ட் ரிவைண்ட் பண்ணிடலாம், பாடத்தை மனனம் செய்த வாய்க்கு குரான் ( தேவையான ) ஓதுவதால் மெமரி சக்தி அதிகம், பப்ளிக் ஸ்பீக் என்பதை 15 நிமிடம் பயான் பண்ணுவதால் கற்றுக்கொள்ளலாம். குக்கிராம முதல் சிட்டி வரை ஜமாத்தில் செல்வதால் வாழ்க்கையில் புது அனுபவம் கிடைக்கும். நன்மை ஒரு பக்கம் என்றால் நல்ல பழக்கங்கள் கற்றுக்கொள்ள சிறந்த வழி என்பதில் ஐயம் இல்லை.

    நான் இந்த ஊரை சேர்ந்தவன் என்று வெளிவூரில் சொன்னால் ம்ம்... அப்துல் காதர் ஆலிம் ஊரா என்று தான் சொல்வார்கள் இது எதனால் ஏற்பட்டது ? அரசியல் வியாதி பற்றி யாரும் குறிப்பிடுவதில்லை. அல்லாஹ் அவர்களுக்கு நீண்ட ஹயாத்து கொடுப்பானாக.
    நம் சமுதாய மக்களை ஒன்று இணைக்கும் இடமாக இருப்பது இஜ்திமா. இங்கிருந்து பல குழுக்களாக பிரிந்து அல்லாஹ்வின் பாதையில் புறப்பட்டு முஸ்லிம் முஸ்லிமாக இருக்கவேண்டும் என்பதை ஒவ்வொருத்தராக சந்தித்து வளிவுருத்துகிறார்கள். மாநாடு அமைதியாக நடைபெற துஆ செய்வோம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.