.

Pages

Friday, February 6, 2015

துபாயில் செயல்படுத்தப்பட உள்ள பிரம்மாண்ட கட்டுமான பணிகளால் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு !

துபாய்: துபாயில் எஸ்போ 2020  நடைபெற உள்ள நிலையில் சுமார் 25 மில்லியன் சுற்றுலாப்பயனிகள் துபாய்க்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் 2020 ஆம் ஆண்டிற்குள் அமையவுள்ள டாப் 15 கட்டுமான திட்டங்கள் சுமார் 66.89 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைய உள்ளது. மேலும் அதிகமானோர் துபாயில் குடியேறி வருவதனாலும், அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதாலும் எதிர்காலத்தில் துபாயில் தங்குவதற்கான குடியிருப்புகள் அதிகம் தேவைப்படும் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்பொழுது துபாயில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டிடம் தொடர்பான சந்தையில் புதிது புதிதாக கட்டிடங்கள் கட்டும்பணி தொடர்ந்துவருகிறது.

இதுதொடர்பாக மயீத் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் கடந்த 7 வருடங்களில் யுஏயில் சுமார் 56.45 பில்லியன்அமெரிக்கடாலர்கள் மதிப்பீட்டிலான கட்டிட பணிகளை பெற்றுள்ளதாகவும் இதில் துபாய் மட்டும் 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பீட்டிலான கட்டிட பணிகளை கடந்த 10 ஆண்டுகளில் பெற்றுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த  இரண்டு ஆண்டுகளில்  துபாயிலுள்ள தனியார் கட்டுமான   நிறுவனங்கள்  பல புதிய கட்டுமான திட்டங்களை ஒருபுறம் அறிவிக்கையில் மற்றொருபுறம் துபாய் அரசு சார்பிலும் அதிக அளவில் பிரம்மாண்டமான கட்டுமான திட்டங்களை அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

யுஏயி-யில் இயங்கி வரும் ஈசி ஹாரிஸ் நிறுவனத்தின் ஆய்வின்படி, யுஏயி-யின் கட்டுமானத்துறை மத்திய கிழக்கிலும் மற்றும் வடஆப்பிரிக்காவிலும் ஒரு நிலையான வளர்ச்சிக்கு காரணம் என தெரிவித்துள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு திட்டம் எது வெனில் சுமார் 30 பில்லியன் யுஏயிதிர்கம் செலவில் 1,60,000 பேர் வசிக்கும் வகையில் அமையவுள்ள டெசர்ட்ரோஸ் என்பதுதான் என கூறுகிறார்கள்

இனி துபாயில் 66.89 அமெரிக்க டாலர் செலவில்அமையவுள்ளடாப் 15 கட்டுமான திட்டங்களில் அல்மக்தூம் சர்வதேச விமானநிலையத்தின் விரிவாக்கம், முற்றிலும் குளிரூட்டப்பட்ட நகரமான மால் ஆஃப்தி வேல்டு, எண்டெர்டைன்மெண்ட் டிஸ்ட்ரிக்ட், துபாய் ரிஃபைனரி, துபாய்மெட்ரோ பர்பில் மற்றும் புளு வழித்தடங்கள் ஆகியனவும் இடம்பெற்றுள்ளது எனவும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கட்டுமானதுறை மிகப்பெரிய வளர்ச்சியடையும் எனவும் இதற்கான வேலைவாய்ப்புக்கள் அதிகரிக்கும் என தெரிகிறது.

நன்றி: தினகரன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.