முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விரைவு பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், குடிநீர் வசதி, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் போன்ற கோரிக்கைகள் உள்பட 350 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 198 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு வட்ட வழங்கல் அலுவலர் கணேஷ்வரன் பயனாளிகளுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன், ஏரிபுறக்கரை ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா முத்துகிருஷ்ணன், ஏரிபுறக்கரை வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் அதிரை பேரூராட்சியின் 8 வது வார்டு உறுப்பினர் 'சேனா மூனா' ஹாஜா முகைதீன் முகாமில் கலந்துகொண்ட பயனாளிகளுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தார்.
ஏரிப்புறக்கரை கிராம வருவாய் எல்லைக்குட்பட்ட ஏரிபுறக்கரை கிராமத்தினர், பிலால் நகர்-ஆதம் நகர்-மேலத்தெரு-கீழத்தெரு-நடுத்தெரு கீழ்புறம்-புதுத்தெரு-தரகர் தெரு - கடற்கரைதெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.




No need expanse , no need waste time , quickly finish work (with in 2 hours) . So, Thanks for Government.
ReplyDelete