.

Pages

Saturday, February 14, 2015

போலீஸ் அதிகாரியான 7 வயது சிறுமி !

மும்பையை சேர்ந்த ஏழு வயது சிறுமி மெஹக் சிங். கடைசி நிலை எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்த சிறுமிக்கு உயிர் பிழைத்திருக்க 10 முதல் 15 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'போன்' கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் 70 சதவீதம் பேர் மரணப்பிடியிலிருந்து காப்பாற்றப்படுகிறார்கள். ஆனால், இந்த சிறுமி நான்காம் நிலையாக கடைசி கட்ட எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் உயிர் பிழைத்திருக்க இனி வாய்ப்பு மிகக்குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மேக்-எ-விஷ் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் போலீஸ் அதிகாரி ஆக விரும்பிய அந்த சிறுமியின் ஆசையை நிறைவேற்ற முன்வந்தது. இதை மும்பை போலீசாரிடம் தெரிவித்தபோது அவர்களும் அதற்கு சம்மதித்தனர்.

இதையடுத்து, அந்த சிறுமி போலீஸ் இன்ஸ்பெக்டர் உடையில் முதல்வன் பாணியில் ஒருநாள் போலீஸ் அதிகாரியாக நாற்காலியில் அமர்ந்தார். காவலர்களுடன் சல்யூட் அடித்தும், உரையாடியும் தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்டார்.

அந்த சிறுமி புன்னகையோடு, 'போலீஸ் அதிகாரியாக வந்து நாட்டைக் காப்பாற்றுவதே எனது ஆசை. போலீஸ் யூனிபார்மை அணிய வேண்டும் என நீண்ட நாட்களாக நான் ஆசைப்பட்டேன்' என்றாள். அவளுடைய ஆர்வத்தை கண்டு மும்பை 'போய்வாடா' காவல் நிலைய அதிகாரிகள் நெகிழ்ந்து போனார்கள்.

சிறுமியின் ஆசையை பூர்த்தி செய்தது பற்றி அவளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாடா மெமோரியல் மருத்துவமனையின் டாக்டர். ஸ்ரீதர் கூறுகையில், 'சில குழந்தைகள் அவர்களுடைய ஆசைகள் நிறைவேறும் போது மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அந்த அதீத மகிழ்ச்சியே நோயை எதிர்த்து போராடும் வல்லமையை ஒரு கட்டத்தில் உடலுக்கு தரும். பெரும்பாலான குழந்தைகள் சினிமா நடிகராக வரவேண்டும் என்றே விரும்புவார்கள். ஆனால், மெஹக் இந்த சிறுவயதிலேயே போலீஸ் அதிகாரியாக விரும்பியிருக்கிறாள். இது மிக அபூர்வம்.' என்றார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.