இந்நிலையில் நமதூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், அதிரை பேரூராட்சியின் கடற்கரைத்தெரு பகுதியின் 8 வது வார்டு உறுப்பினருமாகிய 'சேனா மூனா' ஹாஜா முகைதீன், பொதுமக்களின் சார்பில் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இதுதொடர்பாக இன்று மதியம் வட்ட வழங்கல் அலுவலர் கணேஷ்வரன் சம்பந்தப்பட்ட இன்டேன் கேஸ் விநியோக அலுவலகத்தில் நேரடி விசாரணையை மேற்கொண்டார். இதில் கூடுதல் தொகை கேட்டு வசூலில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என கேஸ் விநியோகஸ்தர் தரப்பில் அலுவலரிடம் உறுதி அளித்ததாக தெரிகிறது.
விசாரணையில் நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணியன், கவுன்சிலர் சேனா மூனா ஹாஜா முகைதீன், அதிரை மைதீன், கவுன்சிலர் அபூதாஹிர், கே. இத்ரீஸ் அஹமது, ஃபெரோஸ்கான் மற்றும் நிறுவன ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணியம் நம்மிடம் கூறுகையில்...
'வாடிக்கையாளர்கள் கேஸ் பில் தொகை வீட கூடுதல் தொகையை கொடுக்க வேண்டாம். ஊழியர்கள் கூடுதல் தொகை கேட்டு வற்புறுத்தினால் எங்கள் அலுவலகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட ஊழியர் மீது உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.






மாஷா அல்லாஹ்
ReplyDeleteநீண்ட நாள் என் ஆதங்கம்.வசூல் ராஜாகளுக்கு ஆப்பு.
எங்கள் வீட்டிலும் நீண்ட காலமாக வாசூல் செய்து வந்தார்கள்.
நான் வீட்டில் இருக்கும் போது இது போன்று என்னிடம் பில்லை விட கூடுதலாக கேட்டார். rs.408 தானே பில்லில் போட்டு இருக்கு என்றேன் டெலிவரி வசூல் என்றார்.அதெல்லாம் சேர்த்துதானே பில்லில் போடுகிறீர்கள். இல்லை நீங்கள் தருவீங்களா மாட்டீங்களா என்று கடுகடுப்பாக கேட்டார்.
நானும் சற்று கோபத்தோடு தறமுடியாது வேண்டுமென்றால் கேஸை திரும்ப எடுத்ச்செல்லுங்கள் நான் எங்கு பேசனுமோ அங்கு பேசிக்கொள்கிறேன் என்று சொன்னது தான் தாமதம் உடனே பில்லில் போட்ட காஸை வாங்கி கொண்டு பொட்டி பாம்பு போல் அடங்கி திரும்பிச்சென்றார்.
இன்று வரையிலும் நாங்கள் பில்லில் போட்ட காசுதான் செலுத்துகிறோம்.
அவர்கள் இந்த அளவுக்கு வசூல் செய்ய துணிந்ததற்க்கு பெண்களே முக்கிய காரணம்
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎத்தனை தடவை .....
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
அருமையான நல்லதொரு செயல்.
நீங்கள் இப்போதுதான் களம் கண்டுள்ளீர்கள்.
முன்னதாக இந்த காஸ் விநியோகம் பட்டுக்கோட்டை நாடியம்மன் நிறுவனத்திடம் இருக்கும்போது (2004, 2005, 2006, 2007, 2008, 2009) அப்போதும் இதே பிரச்சனைதான், நாங்கள் களம் இறங்கி செயல் போட்டோம், வெற்றியும் கண்டோம், ஆனால் நமதூர் மக்கள் ஒரு வழிக்கு வரவில்லை, மீண்டும் கோணலான வழியையே நாடினார்கள்.
அன்று நம் மக்கள் அப்படி என்றால், இன்று அம்மக்கள் எப்படி என்று பொறுத்திருந்து பாப்போம்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com