காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் உதுமான் முகைதீன முன்னிலை வகித்தார்.
முன்னதாக லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் எஸ் வீர பாண்டியன் கண்தானம் குறித்து அறிமுக உரை நிகழ்த்தினார். இதையடுத்து பேரணி கல்லூரி வளாகத்திலிருந்து புறப்பட்டு சென்றது. பேரணியில் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க கண் தானம் பற்றிய விழிப்புணர்வு உண்டாக்கும் வாக்கியங்களை கொண்ட பலகைகளை மாணவ மாணவிகள் கையிலேந்தி ஊர்வலமாக அதிரையின் முக்கிய பகுதிகளில் வலம் வந்தனர். விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
பேரணியில் அதிரை லயன்ஸ் சங்க செயலாளர் பேராசிரியர் முனைவர் N.M.I.அல் ஹாஜி, பொருளாளர் N. ஆறுமுகசாமி, லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் பேராசிரியர் K.செய்யது அகமது கபீர், S.M. முஹம்மது மொய்தீன், சாரா அஹமது, ராஜேந்திரன், பேராசிரியர் முருகானந்தம், மண்டல தலைவர் உள்ளிட்ட லயன்ஸ் சங்க உறுப்பினர்கள், அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் தேசிய மாணவர் படை பிரிவின் திட்ட அதிகாரி மேஜர் முனைவர் எஸ். கணபதி மற்றும் கல்லூரியின் என்சிசி மாணவ, மாணவிகள், காதிர் முகைதீன் கல்லூரி லியோ கிளப் உறுப்பினர்கள், காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சையது அகமது கபீர், முனைவர் எஸ்.சாபிரா பேகம், முனைவர் ஓ.சாதிக், மற்றும் பேராசிரியர் பிரேம் நவாஸ் ஆகியோர் தலைமையின் கீழ் இயங்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட திட்ட அலுவலர் எஸ் நாகராஜன் மற்றும் மாணவர்கள், காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அனுராதா மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர்.
பேரணியின் இறுதியில் அதிரை பேருந்து நிலையபகுதியில் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர்கள் எஸ் வீர பாண்டியன், பேராசிரியர் செய்யது அஹமது கபீர் ஆகியோர் கண்தானம் குறித்து விழிப்புணர்வு உரையாற்றி பேரணியை முடித்து வைத்தனர்.
















நாம் இறந்து விட்டாலும் உயிருடன் இருப்பது நமது கண்கள். கண்தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற இருவருடைய வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம். மேலும் கண்தானம் செய்வது புனிதமான செயல்.இந்தியாவில் தற்போது 1 கோடியே 50 லட்சம் பேர் பார்வையற்றவர்களாக உள்ளனர். இதில் 68 லட்சம் பேர் "கார்னியா' குறை பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் கோடியே 6 லட்சம் பேராக அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ReplyDeleteஒருவர் இறந்து விட்டால், கண்களை மூடி விட்டு, கண்ணின் மீது ஐஸ் கட்டி அல்லது ஈர பஞ்சை வைக்க வேண்டும். இது கார்னியா, குளிர்ச்சியாக இருக்க உதவும். தலையை உயர்த்தி வைக்க வேண்டும். தலைக்கு மேல் இருக்கும் மின் விசிறியை அணைக்க செய்ய வேண்டும். டாக்டர்கள் வரும் வரை, இரண்டு கண்களிலும் ஆன்டிபயாடிக் சொட்டு மருந்தை குறிப்பிட்ட இடைவெளியில் ஊற்ற வேண்டும். ஒருவர் இறந்ததும் ஆறு மணி நேரத்துக்குள் கண் அகற்ற வேண்டும்,
நம்ம சுகாதார மருத்துவ மனை 24 மணி நேர சேவையாக உள்ளது? மருத்துவக் கல்லுரி அருகில் உள்ளதா? இது போகட்டும் , நம் மார்க்கத்தில் அனுமதிக்கப் பட்டதா என்பது பெரிய கேள்வி உள்ளது.
இருக்கும் போது இரத்த தானம்!
இறந்த பின் கண் தானம்!!
இந்த அமைப்பில் உள்ளவர்கள் எத்தனை பேரு register பண்ணி இருக்கீங்க, கோபபடாதீங்க சார்.