.

Pages

Monday, February 2, 2015

குவைத்தில் நடைபெற்ற ஏழைகளுக்கான ஆடைகள் சேகரிப்பு முகாம் !

குவைத்தில் பல்வேறு தளங்களில் கடந்த பத்தாண்டுகளாக தமிழ் மக்களுக்கு சிறப்பான முறையில் சேவையாற்றிக் கொண்டிருக்கும் முதன்மை அமைப்பான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), தன் சேவைகளின் அடுத்தக்கட்ட தொடர்ச்சியாக 'ஆப்பிரிக்கா, சிரியா, லெபனான், ஏமன், ஜோர்டன், ஃபலஸ்தீன் மற்றும் குவைத்' உள்ளிட்ட நாடுகளில் ஏழ்மையில் வாடும் மக்களுக்கு உதவி செய்வதற்காக முதல் முறையாக ஆடைகள் சேகரிப்பு முகாமை சென்ற வெள்ளிக்கிழமை (30/01/2015) அன்று குவைத் தமிழ் பள்ளிவாசலில் ஏற்பாடு செய்திருந்தது.

குறுகிய கால அவகாசம் தரப்பட்டாலும் சுமார் 1 டன் (ஆயிரம் கிலோ) ஆடைகளை மக்கள் அன்பளிப்பாக அள்ளி வழங்கினர். அவற்றை சேகரித்து குவைத்தில் இயங்கும் பூப்யான் வங்கி (Boubyan Bank) துணையுடன் ஒரே நாளில் 56,000 கிலோ (56 டன்) ஆடைகளை சேகரித்து கின்னஸ் சாதனை புரிந்த வளைகுடா அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், குவைத் (Gulf University for Science & Technology, Kuwait) நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

ஆடைகளை அள்ளி வழங்கிய அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதுடன், எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக ஆடைகளை சேகரித்து அல்லல்படும் மக்களுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வோம் என்று குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதற்கு முன் பல்வேறு காலங்களில் இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கபட்ட திருப்பூர், முஸாஃபர் நகர், ஜம்மு & காஷ்மீர் உட்பட பல்வேறு இடங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக உதவித் தொகைகளை இச்சங்கம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:முதுவை ஹிதாயத்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.