கடந்த 04-01-2015 அன்று ஹஜரத்தை சந்தித்து உடல் நலம் விசாரிப்பதற்காக ஹஜரத்தின் இல்லத்திற்கு சென்ற நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மற்றும் சேக்கனா நிஜாம் ஆகியோர் இவரது உடல் நிலையை அறிந்து வேதனை அடைந்தனர்.
இதையடுத்து ஹஜரத் குறித்து 'தோள் கொடுப்போம் நம்ம ஹஜரத்துக்கு !' என்ற தலைப்பில் அதிரை நியூசில் செய்தி பதிவிடப்பட்டது. இவற்றை பார்வையிட்ட வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வசிக்கும் இவரது பாசமிகு மாணவர்கள் பலர் ஹஜரத்துக்கு உதவ முன் வந்தனர். ஹஜ்ரத்தை முத்துப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று நலம் விசாரித்து மருத்துவ உதவிகளை நேரடியாக வழங்கினர்.
இதில் துபாய், சவூதி, சென்னை, அதிரை, முத்துப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் இவரிடம் கல்வி பயின்ற இவரது பாசமிகு மாணவர்கள் மற்றும் இவரது நல விரும்பிகள் நேரடியாகவும், ஹஜரத்தின் வங்கி கணக்கு வழியாகவும், ஒரு சிலர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மற்றும் சேக்கனா நிஜாம் ஆகியோர் மூலமாகவும் நிதி உதவியை வழங்கினார்கள். இதில் நேற்றைய ( 02-02-2015 ) நிலவரப்படி மொத்தம் ₹ 140,500/- வந்துள்ளதாக ஹஜரத்தை சந்திக்க சென்ற நம்மிடம் தெரிவித்தார்.
உதவியவர்கள் விவரங்கள்:
வங்கி கணக்கின் வழியாக
08-01-2015 - ₹ 5000
09-01-2015 - ₹ 5000
14-01-2015 - ₹ 2000
19-01-2015 - ₹ 5000
21-01-2015 - ₹ 2000
28-01-2015 - ₹ 500
ஆக கூடுதல் ₹ 19,500
ஹஜரத்தை சந்தித்து நேரடியாக நிதியை வழங்கியவர்களின் விவரங்கள்:
செக்கடி மேடு நண்பர்கள் ₹ 5000
அன்வர் - ஜஹாங்கீர் ₹ 5000
நசீர் அஹமது ₹ 5000 ( தமுமுக தமீம் மூலமாக )
பெயர் சொல்ல விரும்பாத சகோதரர் ( தமுமுக தமீம் மூலமாக ) ₹ 2000
சரபுதீன் - அமெரிக்கா ( தமுமுக தமீம் மூலமாக ) ₹ 2000
இஸ்மாயில் ₹ 1500
எம்.எம்.எஸ் குடும்பத்தினர் ₹ 7500
துபாய்வாழ் அதிரையர்கள் ( முத்துப்பேட்டை 'சமூக ஆர்வலர்' சுனா ஈனா காக்கா மகன் அப்துல் ஹமீது சுல்தான் மூலம் ) அனுப்பிய ₹ 30,000
யாசர் ₹ 5000
முகைதீன் ₹ 1000
ரவூப் ( முத்துப்பேட்டை ) ₹ 1000
ஆதம் ₹ 500
பாரூக் ₹ 500
ஜமால் முஹம்மது ₹ 7500
முஹம்மது அலி ₹ 2000
கலீல் ஹாப்சா ₹ 5000
மூன் ஆர்ட்ஸ் முகைதீன் ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 15,000
பத்தாஹ் ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 2000
சாகுல் ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 500
பேராசிரியர் மேஜர் கணபதி ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 500
நசுருதீன் ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 1000
ஷமீருத்தீன் ( தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மூலம் ) ₹ 1000
அய்டா - சவூதி ஜித்தா ( சேக்கனா நிஜாம் மூலம் ) ₹ 10,000
ஷஃபாத் - அமெரிக்கா ( சேக்கனா நிஜாம் மூலம் ) ₹ 2000
அப்துல் ஹாதி - அப்பியான் ( சேக்கனா நிஜாம் மூலம் ) ₹ 5000
அதிரை முஜீப் ( ஜஹபர் சாதிக் ) ( சேக்கனா நிஜாம் மூலம் ) ₹ 1000
மீரா மெடிக்கல்ஸ் ( தீனியாத் ஆசிரியர் நஜ்முதீன் மூலம் ) ₹ 1500
முத்துப்பேட்டை ஷாஜஹான் ( அதிரை பேருந்து நிலைய ஈசிஆர் சாலையில் காய்கறி வார சந்தையில் வியாபாரம் செய்து வரும் சகோதரர் ) ₹ 1000
உதவி வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு தாம் நன்றி கூறுவதாகவும், அவர்களுக்காக இறைவனிடம் இருகரமேந்தி துவா செய்வதாகவும் நம்மிடம் தெரிவித்துக்கொண்டார்.
முன்னதாக ஹஜரத்துக்கு நள்ளிரவில் இருமுறை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில், இருதயத்தின் வால்வில் இரு இடங்களில் அடைப்புகள் உள்ளது என்றும், இவற்றை ( பைபாஸ்) அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய வேண்டும் என்றும், ஆனால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொள்ளக்கூடிய அளவிற்கு உடல்கூறு அமையபெற்றில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அறிவுரையின் பேரில் சென்னை சென்று தொடர் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக ஹஜரத் நம்மிடம் தெரிவித்தார்.
இதற்காக இன்னும் சில தினங்களில் சென்னை செல்ல இருப்பதாகவும் கூறினார். ஹஜரத்தின் மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக அமைந்திடவும், பூரண நலம்பெற்று விரைவில் வீடு திரும்பவும் எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்தி பிரார்த்தனை செய்வோம்.

பல நாடுக்கலில் வாழும் அதிரை மக்களுக்கு எடுத்து சென்ற அதிரை நியூஸ், எங்கள் துஆவும் நன்றியும்.
ReplyDeleteபல நாடுக்கலில் வாழும் அதிரை மக்களுக்கு எடுத்து சென்ற அதிரை நியூஸ், எங்கள் துஆவும் நன்றியும்.
ReplyDelete;'Good Job. A Friend in need is a friend indeed.
ReplyDelete