.

Pages

Thursday, February 12, 2015

சுற்றுலா பயணிகளை கவரும் சிங்கப்பூர்: ஒரு பார்வை [ படங்கள் இணைப்பு ]

உலகளவில் சுற்றுலா வாசிகள் வந்து குவியும் இடம் தான் சிங்கப்பூர், அருமையான சொர்க்கத்தை காண்பதை போன்ற பிரம்மாண்டத்தை ஏற்படுத்துகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள ஒரு தீவு தான் சிங்கப்பூர். சிங்கப்பூர் என்ற பெயர் ’சிங்கத்தின் ஊர்’ என்ற தமிழ் பொருளில் அமைந்தது என்றும் 'சிங்கப்பூரா' என்ற மலாய் சொல்லிருந்து மருவியது எனவும் கூறப்படுகிறது.

சிங்கப்பூரின் தேசிய மொழி மலாய். ஆங்கிலம், மாண்டரின், மலாய், தமிழ் ஆகியவை சிங்கப்பூர் அரசின் ஏற்புடைய மொழிகளாக வி்ளங்குகிறது. இதன் பொருளாதாரத்தில் சுற்றுலா துறையும் பெரும்பங்கு வகிக்கிறது. சிங்கப்பூரில் கண்களையும் மனதையும் கொள்ளை கொள்ளும் பல சுற்றுலாத் தளங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி இப்போது பார்ப்போம்:

Marina Bay Sands
சிங்கப்பூரில் பிரபலமாக உள்ள சுற்றுலா இடங்களில் இந்த Marina Bay Sands ரிசார்ட்டும் இடம்பிடித்துள்ளது.

இந்த ரிசார்ட்டில் விலையுயர்ந்த ஹொட்டல்கள், விடுதிகள் மற்றும் எண்ணற்ற கடைகள் என சுற்றுலாவாசிகளை கவர்வதற்கென்றே அமைக்கப்பட்டுள்ளது.
Singapore Flyer
Marina Bay Sands-லேயே அமைந்துள்ள சிங்கப்பூர் ஃப்லையர் எனப்படுவது மிகப்பெரிய ராட்சத ராட்டினம் ஆகும்.

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்த ராட்டினம் செயல்பட்டு வருகிறது. 540 அடி உயரம் கொண்ட இது தொடங்கப்பட்ட காலத்தில் இந்த ராட்டினம் தான் உலகிலேயே மிகப்பெரியதாக விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sentosa island
சிங்கப்பூரில் அமைந்துள்ள எண்ணற்ற தீவுகளில் செண்டோசா தீவுகளும் ஒன்று. கடற்கரைகளுக்கும் ஹொட்டல்களுக்களுக்கும் பெயர் பெற்ற இதில் Universal Studios அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் Underwater world எனப்படும் கடல் வாழ் உயிரினங்களை நீருக்கடியில் அமைத்துள்ள இடத்தில் பார்த்து ரசிக்கும் அருமையான வாய்ப்பை வழங்குகிறது.

Singapore Botanic Gardens
மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தாவரவியல் பூங்காவில் சுமார் 60,000 வகையான விதவிதமான தாவரங்கள் இடம்பெற்றுள்ளன.

Singapore Zoo
சிங்கப்பூரில் குழந்தைகளை வெகுவாக கவரும் அடுத்த இடம், விலங்கியல் பூங்காவாகும். உலகின் மிகச்சிறந்த மழைக்காடுகள் பூங்காவில் இதுவும் ஒன்றாக விளங்குகிறது.

இந்த பூங்காவில் ஒராங்குட்டான், சிம்பன்சி, வரிக்குதிரைகள், வெள்ளைப்புலிகள், கங்காருகள் எனப் பலவகையான விலங்குகள் உள்ளன.

மேலும் இந்த பூங்காவில் நைட் சஃபாரி (Night Safari)எனப்படும் இரவு நேர பயணம் மிக அருமையாக இருக்கும். இதனை காண்பதற்காகவே ஆண்டுதோறும் பல்லாயிரம் சுற்றுலாவாசிகள் வந்து செல்கின்றனர்.

இதேபோல ரிவர் சஃபாரி எனப்படும், ஆற்றில் பயணிக்கும் சேவையொன்றும் இந்த பூங்காவில் உள்ளது.

மேலும் ஜூரோங் என்ற மாவட்டத்தில் அமைந்துள்ள பறவைகள் பூங்கா சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது.

China Town
சைனா டவுண் என்பது சிங்கப்பூரில் வாழும் சீனர்களால் சீனர்களுக்காகவும், அனைவருக்காகவும் அமைக்கப்பட்ட ஒரு இடமாகும்.

இங்கு சீன மக்களுக்கு தேவையான அனைத்து விடயங்களும் கிடைக்கும், இந்த இடத்திற்கு சென்றால் சீன கலைப்பொருட்கள் முதல் சீன உணவுகள் வரை அனைத்தையும் சுவைக்கலாம்.

Little India
லிட்டில் இந்தியா பகுதி சிங்கப்பூரில், தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பகுதியாகும். அந்த இடத்தில் தமிழர்கள் அதிகளவில் வசிப்பதோடு சுற்றுலாவாசிகளுக்கான சிறந்த இடமாகவும் அது விளங்குகிறது. இந்த பகுதியில் பல தேவாலயங்களும், மசூதிகளும் பல கோவில்களும் அமைந்துள்ளது.

இங்கு குறிப்பிட்டுள்ளதை போல இன்னும் எண்ணில் அடங்காத பல சுற்றுலா இடங்களை கொண்டு சிறப்புடன் விளங்குகிறது சிங்கப்பூர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.