.

Pages

Tuesday, February 3, 2015

துபாய் புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீ பிடித்ததாக வதந்தி !

உலகின் உயர்ந்த கட்டிடமான துபாய் புர்ஜ் கலீபா கோபுரத்தில் தீப்பிடித்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. 828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலீபா கோபுரம், உலகின் உயர்ந்த கட்டிடமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தீப்பிடித்து புகை வருவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின, இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதனை துபாய் போலீசாரும், அந்த கட்டிடத்தை நிர்வகித்து வருபவர்களும் திட்டவட்டமாக மறுத்தனர்.

மேலும் பனிமூட்டம் காரணமாக புகை போன்று ஏற்பட்டது என்றும், இதனை படமெடுத்து தவறான வதந்தியை பரப்பியுள்ளார்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

1 comment:

  1. அதிகமாக LIKE வாங்கனமுன்னு சமூக வலைதளங்களில் சமூக அக்கறை உள்ளவர்கள் போல சில பொய்யான தகவலை பரப்புகின்றனர் இது ஒரு வியாபர உக்தி என்று சொல்லலாம் Anchor product Cheese பற்றி செய்தி வந்தது, Cheese தீப்பிடித்து எருகின்றபோது பிளாஸ்டிக் போன்ற துருநாற்றமும் அதன் எறியும் சப்தமும் கேட்பதுபோன்று வீடியோ கிளிப் பரவப்பட்டது. இதனை பார்த்த யாருக்கும் Cheese வாங்க தோணாது.

    உணவு கட்டுப்பாடு அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர் வீடியோ வில் சொல்லப்பட்டது போல் இல்லை என்று நிரூபித்தனர். பிறகு அப்பாடான்னு பெருமூச்சு வந்தது, காரணம் அதிகமாக நாம் வாங்கி வீட்டில் ஸ்டாக் வைத்துருக்கொமே!

    பொய்யான தகவலை பரப்பி பெயர் வாங்கனுமுன்னு ஒரு கூட்டம் இருக்கு, நாம தான் உஷாரா இருக்கணும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.