
முத்துபேட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மிக பெரிய பரப்பளவில் பட்டரைக்குளம் உள்ளது. இதில் சுற்று புறமும் தனியார் ஆக்கிரமிப்பு செய்ததால் குளம் சுருங்கி குட்டையாக மாறிவருகிறது. மேலும் குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்களையும் தனியார் ஆக்கிரமித்தால் தண்ணீர் வர தடைப்பட்டு குளம் வரண்டு போகி இதனால் சுமார் 5 வருடங்களுக்கு மேல் குளம் மக்கள் பயன் பாட்டில் இல்லாமல் போனது. இந்த நிலையில் சென்ற ஆண்டு பேரூராட்சி நிர்வாகம் மக்கள் பயன் பாட்டில் இல்லாத இந்த குளத்திற்கு 29 லட்சம் நிதி ஒதுக்கீட்டு செய்து குளத்துக்குள் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு வசதியாக தடுப்பு சுவர் மற்றும் படித்துறைகள் நல்லநிலையில் இருந்தும் அதனை இடித்து பணிகளை மேற்கொண்டனர். இதனை எதிர்த்து முத்துப்பேட்டை சமூக ஆர்வலர் முகமது மாலிக் என்பவர் கடந்தாண்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சென்ற ஆண்டு டிசம்பர் 6-ந்தேதிக்குள் பேரூராட்சி நிர்வாகம் பட்டரைக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதற்க்கு பேரூராட்சி நிர்வாகம் 3 மாதகாலம் அவகாசம் கோரியது அதனையும் ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம் அன்றைய தினமே பேரூராட்சி நிர்வாகம் பிப்ரவரி மாதம் (இந்தமாதம்) இறுதிக்குள் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு மார்ச் 15ந்தேதிக்குள் நீதிமன்றதில் ஆதாரங்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி பேரூராட்சி நிர்வாகம் பட்டரைக்குளத்தை அளவீடு செய்து 59 ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோடீஸ் அனுப்பியது. இதில் பேரூராட்சியில் பணி புரியும் துப்பரவு தொழிலாளர்களின் வீடுகள் முழுவதும் அகற்றும் நிலை ஏற்ப்பட்டது. ஆனால் யாரும் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை இந்த நிலையில் கடந்த வாரம் பேரூராட்சி நிர்வாகம் மீண்டும் 59 ஆக்கிரமிப்பாளர்களுக்கு இறுதி நோடீஸ் அனுப்பியது. இதில் நேற்று பிப்ரவரி 7ந்தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் இல்லையேல் வருகிற பிப்ரவரி 10-ந்தேதி பேரூராட்சி நிர்வாகமே அகற்றும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று காலை பேரூராட்சியில் பணி புரியும் 30 துப்பரவு தொழிலாளர் தங்களுக்கு மாற்று இடம் அரசு தரவேண்டும். ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வீட்டிலேயே இருந்துக்கொண்டு பணிக்கு செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் நேற்று முத்துப்பேட்டை நகரில் வழக்கம் போல் நடந்து வந்த குப்பை சேகரித்து அகற்றி வந்த பணிகள் தடைப்பட்டது. இதனால் நகரில் ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியளாக கிடந்தது. இந்தநிலையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட துப்பரவு தொழிலாளர்களிடம் பேரூராட்சி தி.மு.க கவுன்சிலர் சிவ.அய்யப்பன், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர் கோவிந்தராஜ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர், இதில் உடன் பாடு ஏற்படவில்லை. நேற்று மாலையும் பணிக்கு அவர்கள் திரும்பாமல் போராட்டத்தை தொடர்ந்து உள்ளனர், இதனால் முத்துப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை
பேரூராட்சியில் பணி புரியும் 30 துப்பரவு தொழிலாளர் தங்களுக்கு மாற்று இடம் அரசு தரவேண்டும் கேட்பது நியாயம் தான், இவர்களுக்கு முன்பே அரசு செய்து கொடுத்திறக்க வேண்டும். அழகிரியால், மதுரையில் ஐந்து ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு, தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் சுந்தர்ராஜ் கூறியது தி.மு.க கவுன்சிலர் சிவ.அய்யப்பன் என்ன சொல்லப் போறார்?
ReplyDeleteஇரண்டு கழகமும் தமிழ் நாட்டில் ஆக்கிரமிப்பு செய்ததை திரு சகாயம் வெளிக் கொணர்ந்து வருகிறார் என்பது யாவரும் அறிவர். அரசியல் வாதிகளின் லட்சியமே கொள்ளை அடிப்பது தானோ?