.

Pages

Wednesday, February 11, 2015

இந்தப் புற்றிலும் பாம்பிருக்குமா ? - டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ் (ஓ)

சமீப காலங்களில் வெளியிலும், வீட்டிலும் நடைபெறும் பாலியல் குற்றங்கள் பற்றி பரபரப்பாக பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன என்பதினை அனைவரும் அறிவோம். அந்தப் பாலியக் குற்றங்கள் பற்றி சில ஆராய்ச்சித் தகவல்களை உங்களுடன் ஒரு வருமுன் காக்கும் விழிப்புணர்விற்காக பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கின்றேன்.

அதுவும் மும்பையில் மூடிக் கிடந்த மகாலட்சுமி மில்லில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கை பெண் 23.8.2013 அன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்பும், புது டெல்லி உபேர் டாக்சியில் சென்ற பெண் பொறியாளர் 5. 12. 2014 அன்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிகழ்விற்குப் பின்பு பாலியல் குற்றங்கள் சம்பந்தமான செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டது, கடுமையான சட்டங்கள் வேண்டும் என்றும் குரல் எழுப்பப்பட்டது.

ஆனால் வெளியில் நடக்கும் குற்றங்களை விட வீட்டுக்குள் நடக்கும் பாலியத் தொல்லைகள் அதிகம் என்று ஆராய்சிக் குறிப்புகள் சொல்கின்றன:

புதுடெல்லியில் நடந்த பாலியல் குற்றத்திற்குத் தொடர்ந்து புதுடெல்லியில் உள்ள 44 காவல் நிலையங்களில் பதிவு செய்யப் பட்ட பாலியல் குற்றங்கள் சம்பந்தமான முதல் தகவல் அறிக்கைகள் எத்தனை என்ற ஒரு 'அபிடாவிட்' தாக்கல் செய்ய புதுடெல்லி காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த அபிடாவிட்டில் டெல்லி காவல்த் துறையினர், 2014 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் மாதம் வரை தாக்கல் ஆன குற்றங்கள் 2276 என்றும், அதில் 1375 புகார்கள் அதாவது 60 விழுக்காடுக் குற்றங்கள் வீடுகளிலேயே நடந்துள்ளதாம். 1767 பாலியப் புகார்களில் அதாவது 78 விழுக்காடு குற்றங்கள் குடும்பத்தில் உள்ள ஏதாவது ஒரு உறுப்பினரோ, அல்லது குடும்பத்தினருக்கு நன்கு தெரிந்தவராகவோ இருந்துள்ளனர். பெரும்பாலான வீட்டுக்குள் நடக்கும் குற்றங்கள் காவல் நிலையம் வரை வருவதில்லை.

மேற்குறிப்பிட்ட தகவல்கள் உண்மையே என்பதினைக் கூறும் அளவிற்கு, 'பிட்டர்  சாக்லேட்'(கசக்கும் மிட்டாய்) என்ற புத்தகத்தினை எழுதிய பிங்கி என்ற எழுத்தாளர், 'இந்தியா முழுவதிலும் நடுத்தர மற்றும் மேல் நிலைக்  குடும்பத்தில் வாழும் இளம் சிறார்கள் ஆண்களோ, பெண்களோ பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள். அதுபோன்றே குடும்பத்தினர் மிகவும் நம்பி இருக்கும் டிரைவர்களோ, தந்தையோ, மாமா என்று அழைக்கப் படுகிறவர்களோ, தாத்தாக்களோ, மதபோதகர்களோ, மருத்துவர்களோ, சமையல்காரர்களோ, பள்ளி ஆசிரியர்களோ, பள்ளிப் பணியாளர்களோ, நிர்வாகிகளோ சிறார்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள் என்று விரிவாக வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார். அதனைப் பத்திரிக்கைகள், டி.வி. ஒளிபரப்புகள் மூலம் அறிந்துள்ளோம்.

காவல்துறையும், அரசும் வீட்டுக்கு வெளியே நடக்கும் பாலியல் குற்றங்களைத் தடுக்க அல்லது கண்டுபிடிக்க அல்லது சட்டங்கள் இயற்ற நடவடிக்கைகள் எடுக்கலாம். ஆனால் வீட்டுக்குள் நடக்கும் பாலியல் குற்றங்களைத் யார் தடுப்பது என்றக் கேள்விக்கு விடை அல்குராணின் அல் நூர் 24 அத்தியாயத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது அகிலத்தில் உள்ள அனைவருக்கும் ஒரு படிப்பினை என்றால் மறுக்க முடியாது:

அத்தியாயம் 24(27-29) ‘இறை நம்பிக்கை கொண்டவர்களே, உங்களுடைய வீடுகளைத் தவிர மற்றவர் வீடுகளில் அந்த வீட்டாரின் அனுமதியின்றி நுழையாதீர்கள்'

அத்தியாயம் 24(30) ‘இறை நம்பிக்கை கொண்ட ஆண்களிடம், அவர்கள் தங்கள் பார்வைகளைப் பேணிக் கொள்ளும்படியும், தங்கள் வெட்கத் தளங்களைப் பாதுகாத்துக்  கொள்ளும்படியும், பெண்கள் தங்கள் அழகை வெளிக் காட்டாதவாரும் பார்த்துக் கொள்ளவும்'

அத்தியாயம் 24(58-59) 'உங்களுடைய அடிமைகளான ஆண்களும், பெண்களும் பருவ வயதை அடையாத உங்கள் சிறுவர்களும், மூன்று நேரங்களில் உங்களிடம் வருவதிற்கு அனுமதியுங்கள், உங்கள் சிறுவர்கள் விபரம் தெரியும் பருவத்தை அடைந்து  விட்டால், அவர்களுடைய பெரியோர்கள் எவ்வாறு அனுமதி கோருகிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும்'.

சிறுவர், சிறுமி ஏழு வயதினை அடைந்து விட்டால் தனித்தனியே படுக்கைக்கு அனுப்பும் வழிமுறையும் இருக்கின்றது என்றால் எவ்வாறு இஸ்லாமிய மார்க்கம் தொலை நோக்குக் கண்ணோடு எந்நாளும் பொருத்தமாக எடுத்துச் சொல்லி இருக்கின்றது என்று தெளிவாகும்.

ஆகவே தான் உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் பாலிய தொல்லைகள் இஸ்லாமியக் குடும்பத்திலும் நடக்காது பாதுகாப்போமாக !

டாக்டர் ஏ.பீ. முகமது அலி, பிஎச்,டி, ஐ.பீ.எஸ்(ஓ)
ஓய்வுபெற்ற மூத்த காவல்துறை அதிகாரி / எழுத்தாளர் / சமூக ஆர்வலர்

4 comments:

  1. எத்தனை விதமாக எடுத்துரைத்தாலும் பாலியல் குற்றங்கள் குறைந்தபாடில்லை . அனுதினமும் கூடிக் கொண்டுதான் போகிறது. இதில் வேதனைப் படக்கூடிய விஷயம் என்னவென்றால் வெளிஉலகுக்கு நல்லவர்களாக போற்றப்படுபவர்களும் ,நல்ல ஆசான் எனப் பெயரேடுத்தவர்களும் சிறந்த அரசியல் வாதியென புகழாரம் சூட்டியவர்களும் இப்படி உயர்நிலையில் உள்ளவர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதே வேதனையளிக்கிறது. இதனைத் தடுக்க சட்டத்தை இன்னும் கடுமையாக்க வேண்டும். இத்தகைய விழிப்புணர்வுக் கட்டுரைகளும் பதியப் படவேண்டும். விழிப்புணர்வு பிரச்சாரங்களும் மேற்கொள்ள வேண்டும்.

    இது பற்றி நானும் பல கட்டுரைகளை சமூக விழிப்புணர்வு பக்கங்களில் பதிந்துள்ளேன். அதன் லிங்க் இதோ

    http://nijampage.blogspot.in/2015/01/blog-post_5.html

    http://nijampage.blogspot.in/2014/10/blog-post_15.html

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    தெளிவான ஆக்கம், அருமையான ஆக்கம், உண்மையான ஆக்கம், நமது மார்க்கத்திலும் நல்ல நல்ல வழிகள் இருக்கும்போது ஏன் இந்த தடுமாற்றம்?

    வேறு விளக்கம் என்ன சொல்ல வேண்டும்?

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.(காசுக்கடை கோஸு முஹம்மது பேரன்)
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- kmajamalmohamed@gmail.com

    ReplyDelete
  3. சகோதரர் அதிரை மெய்சா கூறியது போல் சிறந்த அரசியல் வாதியென புகழாரம் பெற்றவர் மலேஶியா எதிர் கட்சி தலைவர் அன்வர் இப்ராஹிம்க்கு 5 ஆண்டு சிறை தண்டனை கிடைத்து உள்ளது பாலியல் குற்றத்திற்காக.

    ReplyDelete
  4. சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு தாத்தா கைது மருமகள் கொலையில் மருமம்!. மகளை கருப்பமாக்கி தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த ராணுவ அதிகாரி கைது நெல்லையில் பரபரப்பு!. தாகாவில் எனா முள் மியா (20) என்ற வாலிபன் பெண்ணை கருப்பமாக்கியதர்க்காக 101 கசையடி கொடுக்க அப்பெண்ணிற்கு தீர்ப்பு வழங்கப்பட்டது அதிர்ச்சி!!
    இப்படி தினமும் செய்தி வருவதை பார்க்கிறோம்.

    அதிகார ஆதிக்கத்தால் ஒரு பெண்ணை கெடுத்து, குழந்தையும் கொடுத்து குடும்பத்தை சீரழித்த கொடுமை நம்மவூரில் அரங்கேறியது, பெண்ணுக்கு தான் தண்டனை வழங்கப் பட்டதே தவிர அவன் தண்டிக்கப் படவில்லை....

    சட்டம் கடுமையாக்கப் படவேண்டும் !!?? குஷ்பு (வருங்கால தமிழக முதல்வர்!) கறுப்பு பற்றி சொன்னதற்காக " திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ அல்லது திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் விரும்பும் பட்சத்தில் இணைந்து வசிப்பதோ எந்தவிதத்திலும் தவறு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

    சட்டப்படி தவறு இல்லை .ஆனால் கலாச்சாரம் என்ன ஆவது ? தனி நபர் ஒழுக்கம் பாதித்தால் குடும்ப வாழ்க்கை பாதிக்கும் , குடும்ப வாழ்க்கை பாதித்தால் மனநலம் பாதிக்கும்,மனநலம் பாதித்தால் குழந்தைகள் நலம் பாதிக்கும் . கடைசியாக ஒட்டுமொத்த சமுதாயமும் பாதிக்கும் . தீர்ப்பு சொன்னவர் தன் மனைவியோ மகளோ அவரவர் விருப்பப்படி இருக்க அனுமதிப்பாரா?

    கருபுக்கரஷி கண்ணகி இருந்தால் நவீன உக்தி பயன்படுத்தி இச்சட்டத்தை ஆசிட் ஊத்தி எரித்திடுவார், நீதிபதி பாக்கியம் அவர் உயிரோடு இல்லை.

    தொடர்ந்து எழுதுங்கள் - வாழ்த்துக்கள் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.