.

Pages

Friday, February 6, 2015

அதிரை பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக போஸ்ட்டர் அறிவிப்பு !

'ஐக்கிய தேசிய மக்கள் கட்சி' என்ற பெயரில் புதிய கட்சியொன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு உதயமானது. இதன் நிறுவனர் மற்றும் தலைவராக முஹம்மது இப்ராஹீம் இருந்து வருகிறார். கட்சியின் தலைமையகம் அதிரை பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிரை பேரூராட்சியின் மூலம் விநியோகிக்கும் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதாகவும், இவற்றை சரி செய்ய தவறினால் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து எதிர்வரும் 10-02-2015 அன்று காலை பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே கண்டனம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என ஐக்கிய தேசிய மக்கள் கட்சி சார்பில் கடந்த வாரம் எச்சரிக்கை அறிவிப்பு விடுத்து இருந்தது.

இந்நிலையில் இந்த அறிவிப்பை உறுதி செய்யும் வகையில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிரையின் பிராதான பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.