.

Pages

Thursday, February 12, 2015

தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் விருது !

பேராவூரணியை அடுத்த கொன்றைக்காடு அரசினர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் மு.கருணாநிதி. இப்பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகளாக நூறு சதவீதம் தேர்ச்சி பெறுவது குறிப்பிடத்தக்கது.
         
இவருக்கு அண்மையில் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் என்.சுப்பையன், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சிறந்த உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கான விருதை வழங்கினார். விழாவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தர்மராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வே.தமிழரசு ஆகியோர் பங்கேற்றனர்.
         
சிறந்த தலைமையாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியர் மு.கருணாநிதியை, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் எஸ்.கே.இராமமூர்த்தி, சக ஆசிரியர்கள், கிராமத்தினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

செய்தி மற்றும் படம்:
எஸ். ஜகுபர் அலி, பேராவூரணி

1 comment:

  1. வாழ்த்துக்கள் ...
    ஆசிரிய பெருந்தகைக்கு ..
    அப்பள்ளி என்றும் சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.