சமூக நலத் துறை சார்பில் வழங்கப்படும் திருமண நிதியுதவி திட்டங்களுக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் என். சுப்பையன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாவட்டம், சமூக நலத் துறையின் சார்பில் வழங்கப்படும் மூவாலூர் ராமாமிர்த அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற மகள் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவி திட்டம் போன்ற திட்டங்களுக்கு இணையவழி மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்டம் முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள மின் ஆளுமை திட்டத்தின் கீழ் சமூக நலத் துறை உதவிக்கான விண்ணப்பங்களை இணைய வழி மூலம் மின்னனு முறையில் பதிவு செய்து அனுப்பி வைக்கலாம். பதிவு செய்யப்பட்ட படிவங்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு இணையதளம் வழியாக அனுப்பப்படுகிறது. விண்ணப்பத்தில் தங்கள் செல்லிடப்பேசி எண்ணை தவறாமல் குறிப்பிட வேண்டும். செல்லிடப்பேசியில் வரும் குறுந்தகவல் மூலம் தகவலை தெரிந்து பயன் பெறலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.