06/02/2015 வெள்ளிக் கிழமை இன்று மாலை 5 மணியளவில் சகோதரர் அப்துல் ரெஜாக், சகோதரர் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் தங்கியிருக்கும் வில்லாவில் அமீரகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் அதிரை அமீரக ஆசாத் நகர் ( தரகர் தெரு ) அமைப்பின் மாதாந்திர கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது.
இந்த கூட்டத்தை அமீரக ஆசாத் நகர் அமைப்பின் தலைவர் அயூப்கான் தலைமையேற்று நடத்தி வைத்தார். கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு முஹல்லா நலன் சம்பந்தபட்ட விஷயங்கள் கலந்தாலோசனை செய்தனர்.
புகைப்படங்கள் உதவி: அயூப்கான்
செய்தித்தொகுப்பு : அதிரை மெய்சா
ஆலிம் தன்னை அறிவாளி என்று தானே அழித்துக் கொள்வார்கள் உலமாக்கள் என்பவர்கள் சொல்லாத சொல்லி மக்களிடத்தில் உளம்புவார்கள் என்று சொல்லக் கேட்டிருக்கோம் இந்த வார்த்தைக்கு சொந்தக்காரர் தரகர் தெரு ஜும்மா பள்ளியில் இமாமாக இருக்கும் கடற்க்கரை தெரு அப்துல் நாசர். கடந்த 28/01/2015 அன்று மறைந்த மர்ஹூம் சுல்தான் அவர்களுக்கு ஜனாஸா தொழுகை வையுங்கள் என்று இவரிடம் சொல்லி இருக்கிறார்கள்,
ReplyDelete" நீங்கள் வேற குருப் உங்களுக்கு தொழுகை வைக்கக் கூடாதுன்னு தெரு நிர்வாகம் எனக்கு சொல்லி இருக்கு" என்று சொன்னவர் அமைதியாக பள்ளியில் அமர்ந்து மற்றவர் தொழுகை வைப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார். அல்லாஹ் தான் தனக்கு உணவளிக்கிரான்னு என்ற அச்சம் இல்லை. இவர் யாருக்கு பயப் படுகிறார்?
இத்தெருவில் மார்க்க கல்வி கொடுத்த மறைந்த மர்ஹூம் அஹமது ஹஜா லெப்பை யாருக்கும் அஞ்சாதாவர், அவரின் உழைப்பு, மார்க்கத்தின் மீது பற்று இதனை நினைத்தால் கண்ணீர் தான் வருகிறது. நிர்வாகமே இவருக்கு கட்டுப்பட்டதுன்னு சொல்லலாம், இன்று நிலைமை தலைகீழ்!
உலமா சபை இவ்விசயத்தை இவரிடம் விசாரிக்குமா? உலமாக்களின் பங்கு என்னவென்பதை இவருக்கு எடுத்துரைக்குமா? இத்தெரு நிர்வாகம் கடந்த 17 /12/2014 அன்று மறைந்த மர்ஹூம் மொவ்லா கருமா என்பவரின் ஜனாஸாவை அடக்க கூடாது என்று சொன்னதால் முன்னாள் உதவி ஆய்வாளர் ரவி சந்திரன் அவர்கள் நிர்வாகத்தை கண்டித்தது நினைவுக் கூறத் தக்கது.