அதிரை நியூஸ்: டிச.03
அமீரகத்தில் 46 வது தேசிய தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த தேசிய தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமீரகம் முழுவதற்கும், அபுதாபி எமிரேட்டின் சார்பாகவும் போக்குவரத்து அபராதங்களில் 50% சிறப்புத் தள்ளுபடியை அறிவித்துள்ளாதுடன் இதை உடனே நடைமுறைப்படுத்துமாறு அமீரக உள்துறை அமைச்சகத்திற்கும் உத்தரவிட்டுள்ளார் அபுதாபியின் பட்டத்து இளவரசரும், அமீரக ராணுவத்தின் துணை கமான்டருமான ஷேக் முஹம்மது பின் ஜாயித் அல் நஹ்யான்.
ஏற்கனவே பெரும்பாலான அமீரக எமிரேட்டுக்கள் தனித்தனியாக தள்ளுபடி மேளாக்களை நடத்திவரும் நிலையில் அமீரகம் முழுமைக்குள் செல்லுபடியாகும் இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, 2016 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 2017 ஆம் வருடம் டிசம்பர் 1 ஆம் தேதி வரை நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்றும் டிசம்பர் 2 ஆம் தேதி முதல் நிகழ்த்தப்பட்ட குற்றங்களுக்கு இது பொருந்தாது.
மேலும், இந்த சிறப்புத் தள்ளுபடியின் கீழ் அபராதங்களை 2017 டிசம்பர் 2 ஆம் தேதி முதல் துவங்கும் 60 நாட்கள் (2018 ஜன.30) வரையே செலுத்தலாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.