அதிராம்பட்டினம், டிச.02
நபிகள் நாயகத்தையும், குர்ஆன்னையும் விமர்சித்து வரைந்த கேலிச்சித்திரத்தை முகநூலில் பரப்பிய நபர் மீது தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு.
இஸ்லாமியர்களின் புனிதமிகு நூல் திருக்குர்ஆன்னையும், இறைவனின் இறுதித் தூதர் முகம்மது நபி (ஸல்) அவர்களையும், விமர்சித்து வரைந்த கேலிச்சித்திரத்தை நேற்று வெள்ளிக்கிழமை முகநூலில் பரப்பிய சந்தோஷ் தனபால் என்பவர் மீது, அதிராம்பட்டினத்தை சேர்ந்த ஏ.ஜே ஜியாவுதீன் அளித்த புகாரின் பேரில், அதிராம்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் பி.தியாகராஜன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
புகார் மனுவில் ஏ.ஜே. ஜியாவுதீன் கூறியிருப்பதாவது; எதிர்வரும் டிச.6 ஐ முன்னிட்டு தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், சந்தோஷ் தனபால் என்ற பெயரில் எங்கள் உயிரினும் மேலான மார்க்கத்தையும், குர்ஆனையும் மற்றும் நபிகள் நாயகத்தையும் கேலிச்சித்திரம் வரைந்து முகநூலில் பரப்பி வருகிறார். தமிழகத்தில் மதநல்லிணக்கத்தை சீர்குலைக்க திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற கேலிச்சித்திரப் பதிவுகளை இணையதளங்களில் பரப்பி வருகிறார். இதனால் மக்களிடேயே மதமோதல்கள் ஏற்பட இப்பதிவு காரணமாக அமைந்துவிடலாம். ஆகையால், இவர் யார் என கண்டறிந்து, இவர் மீது வழக்கு பதிந்து உரிய தண்டனை வாங்கித்தருமாறும், பிரச்சனைக்குரிய பதிவை முகநூலில் இருந்து நீக்கிடவும், கடுமையாக எச்சரித்து இணையதளங்களில் வரக்கூடிய மதத்தூவேஷப் பதிவுகளை அனுமதிக்காதவாறும் உலக முஸ்லீம்கள் மற்றும் அதிரை முஸ்லீம்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்' என புகாரில் தெரிவித்துளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.