அதிராம்பட்டினம், டிச.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை, தஞ்சை மாவட்ட பார்வை இழப்பு சங்கம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாம் அதிராம்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.
முகாமிற்கு அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத் தலைவர் ஆர். ஆறுமுகம் தலைமை வகித்தார். செயலாளர் டி. முஹம்மது நவாஸ்கான், பொருளாளர் இசட். அகமது மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில், கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவர் டெரின் தலைமையில் மருத்துவ குழுவினர் கண் பரிசோதனை செய்தனர். முகாமில் 97 பேர் கலந்துகொண்டனர். இதில், 23 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டு கோவை சங்கரா கண் மருத்துவமனைக்கு வாகனத்தில் அழைத்துச்சென்றனர். முகாம் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடந்தது. இதில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
இம்முகாமில், ரோட்டரி சங்க நிர்வாகிகள் வெங்கடேஷன், முகமது தமீம், சம்சுதீன், அப்துல் ஹலீம், உதயகுமார், வைரவன், நவாஸ்கான், சாகுல்ஹமீது, எம்.மன்சூர், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.